பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 அளபெடை நிலையுங் காலத் தானும் அளபெடை யின்றித் தான் வருங் காலேயும் உளவென மொழிப ப்ொருள்வேறு படுதல் குறிப்பி னிசையா னெறிப்படத் தோன்றும். இஃது ஒளவென்னும் இடைச்சொற் பொருள் படுமாறு கூறுகின்றது. (இ-ள்) இரண்டு மாத்திரையுடைத்தாய் மொழிக்கு ஈருகா தெனப்பட்ட ஒளகாரம், பிரிவிலசை நிலே யென மேற்கூறப்பட்ட அவ்வியல்பில் ஒள ஒள என இரட்டித்து நிற்குமிடத்தும், இரட்டியாது 'ஒள'உ' என அளபெடையாய் நிற்குமிடத்தும், அளபெட்ையின்றி (ஒள என)த் தான் வருமிடத்தும் பொருள் வேறுபடுதல் உள என்பர். அப்பொருள் வேறுபாடு சொல்லுவான் குறிப்பிற்குத் தகும் ஓசை வேறுபாட்டிற் புலப்படும். எ~று. பொருள் வேறுபடுதலாவது உலக வழக்கில் சிறப்பும் மாறுபாடுமாகிய வேற்றுமை புலப்பட நிற்றல் (உ-ம்). ஒள ஒள ஒருவன் தவஞ் செய்தவாறு? என்ற வழிச் சிறப்புத் தோன்றியது. ஒரு தொழில் செய்வானே நோக்கி ஒள ஒள வினிச் சாலும் என்றவழி மாறுபாடு தோன்றியது. 'ஒளஉ ஒருவன் இரவலர்க்கிந்தவாறு; ஒளஉ வினி வெகுளல்.’ எனவும், ஒள வவன் முயலுமாறு; ஒளவினித்தட்டுப் புடையல்? எனவும் அளபெடுத்தும் அளபெடாதும் வந்தவழியும் முறையே சிறப்பும் மாறுபாடுமாகிய அப்பொருள் தோன்றியவாறு காண லாம். இது தத்தங் குறிப்பிற் பொருள்படுமாயினும் அடுக்கி வருதலுடைமையால்கண்டு வைக்கப்பட்டது. உஅஉ. நன்றிற் றேயும் அன்றிற்றேயும் அந்திற் ருேவும் அன்னிற் ருேவும் அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும். இது, சொல்லுதற் குறிப்பினுற் பொருள் வேறுபடும் இ ைச் சொற்க ளிவையெனக் கூறுகின்றது. (இ-ள்) நன்று ஈற்று ஏ ஆகிய நன்றே என்பதும், அன்று