பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321 ஈற்று ஏ ஆகிய அன்றே என்பதும், அந்து ஈற்று ஒ ஆகிய அந்தோ என்பதும் அன் ஈற்று ஒ ஆகிய அன்னே என்பதும் அவை போல்வன பிறவும் குறிப்போசையாற் பொருளுணர்த்தும் இடைச்சொற்களாம். எ-று. நன்றிற்று ஏ - நன்றினது ஈற்றின்கண் ஏ என விரியும். இவ்விரிவு ஏனேயவற்றிற்கும் ஒக்கும். ஒருவன் ஒன்றுரைத்தவழி அதற்கு இசையாத ன் நன்றே நன்றே’, ‘அன்றே அன்றே என அடுக்கிக் கூறலும் உண்டு. அங்ங்ணம் கூறிய நிலையில் அவ்வடுக்குமொழி இசைவின்மைக் குறிப்பு விளக்கும். அவனன்றே இது செய்வான் என அடுக் காது கூறியவழி அன்றிற்றேவுக்குத் தெளிவு முதலிய பிற பொருளும் தோற்றும். அந்தோ, அன்னே எனவரும் ஒகார வீற்றிடைச் சொற்கள் இரண்டும் இரங்கற் குறிப்பு வெளிப் படுத்தும். அன்னபிறவும் என்ற தல்ை, அதோ அதோ , சோ சோ, ஒக்கும் ஒக்கும் என்னுந் தொடக்கத்தன குறிப்பிற் பொருள்படும் இடைச் சொற்களாகக் கொள்வர் சேஞ வரையர். உஅங். எச்ச வும் மையும் எதிர்மறை யும்மையும் தத்தமுண் மயங்கு முடனிலே யிலவே. இது, மேற்கூறப்பட்ட இடைச்சொல்லின்கட் படும் இலக் கண வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) எச்சவும்மை நின்ற நிலையில் எஞ்சு பொருட்கிளவி யாகிய எதிர்மறையும்மைத் தொடர் வந்து தம்முள் மயங்குதல் இல. எ-று. சாத்தனும் வந்தான், கொற்றனும் வரும்? என்பது எச்சவும்மை . அதனைச் சாத்தனும் வத்தான், கொற்றனும் வரலுமுரியன்’ என எதிர்மறையும்மையொடு கூட்டிச் சொல் லின், அவை எச்சமும் அதனை முடிக்கும் எஞ்சுபொருட்கிளவியு மாய்த் தம்முள் இயையா என்பதாம்.