பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 உஅச. எஞ்சுபொருட் கிளவி செஞ்சா லாயிற் பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். இஃது எச்சவும்மைக்கண் சொல்லுதல் வகைமை கூறுகின்றது. (இ-ள்) எச்சவும்மையால் தழுவப்படும் எஞ்சுபொருட் கிளவி உம்மையில்லாத சொல்லாயின் அவ்வும்மையில்லாத சொல்லே அவ்வும் மைத் தொடராகிய எச்சத்தின் பின்னே சொல்லார், முன்னே சொல்லுக. எ.று. செஞ்சொல்-உம்மையின்றிச் செவ்விதாக அமைந்த சொல். (உ-ம்) சாத்தன் வந்தான்-கொற்றனும் வந்தான் என வரும். கொற்றனும் வந்தான்-சாத்தன் வந்தான் எனப் பின்னே கூறின் முற் கூறியதனை விலக்குவது போன்று தம்முள் இயையா மை கண்டு கொள்க. உம்மையில்லாத செஞ்சொல்லாயின் முற்படக் கூறுக எனவே, உம்மையொடு வரிற் பிற்படக்கூறுக என்றவாரும். உம்மையில்லாத சொல்லாகிய செவ்வெண்ணின் ஈற்றிலேயே எச்சவும்மை வரும் என்பதனே, 426. செவ்வெண் ணிற்றதா மெச்ச வும் மை. என்னுஞ் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார். (உ-ம்) அடகு புலால் பாகு பாளிதமும் உண்ணுன்? எனவரும் அடகும் புலாலும் பாகும் பாளிதமும் உண்ணு ன் என உம்மை விரித்துப் பொருள் கொள்க. உஅடு. முற்றிய வும் மைத் தொகைச்சொன் மருங்கின் எச்சக் கிளவி யுரித்து மாகும். இது, முற்றும்மை ஒரோவழி எச்சப்பொருள்பட வரும் என் கின்றது. (இ~ள்) முற்றும்மை யடுத்து நின்ற தொகைச் சொல்லிடத்து எச்சச்சொல் உரித்துமாகும். எ-று.