பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 செய்யுமெ னெச்ச வீற்றுயிர்மெய் சேறலும் செய்யுளுள் உம் உந்த கலும் (நன்னுரல்-340) எனவரும் தொடர் இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும். செய்யும் என்பது வினைச் சொல்லாயினும் அதனிற்றிற் கால முணர்த்தி நிற்கும் உம் என்பது இடைச்சொல்லாதலின் அதன் திரிபுகூறும் இச்சூத்திரம் இடையியலில் இடம்பெற்றது. (உ.ம்) தண் குரவைச் சீர் துரங்குந்து எல்வளை மகளிர் தலைக்கை தருஉந்து (புறம்-24) எனவரும் தொடர்களில் சீர்துங்கும் என்பது சீர்தூங்குந்து எனவும், தரூஉம் என்பது தருஉந்து எனவும் உம் உந்தாய்த் திரிந்தமை காண்க உகங். வினேயொடு நிலையினு மெண்ணுநிலை திரியா நினேயல் வேண்டு மவற்றவற் றியல்பே. இஃது எண்ணிடைச் சொற்குஆவதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ஸ்) வினையொடு நிற்பினும் எண்ணிடைச்சொற்கள் தம் எண்ணுநிலையில் மாறுபடா. அவற்ருெடு வருங்கால் அவற் றவற்றியல்பு ஆராய்தல் வேண்டும். எ-று. (உ-ம்) உண்டுந் தின்றும் ஒடியும் பாடியும் வந்தான்? எனவும். உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான்? எனவும் வரும். ஒழிந்த எண்னெடு வருவன வுளவேல் அவை யும் இவ்வாறு எண்ணுநிலையிற் றிரியாமை கண்டுகொள்க. எண்ணிடைச்சொல் பெரும்பான்மையும் பெயரோடல்லது நில்லாமையின் அதனை முற்கூறிச் சிறுபான்மை வினையொடு நிற்றலுமுடைமையால் அதனை ஈண்டுக்கூறினர். எண்ணுதற் பொருளில் வரும் இவ்விடைச்சொற்கள் வினையெச்சங்களுள் ஏற்பனவற்ருேடு வருதலன்றி ஏனேமுற்றுச்சொல்லும் பெயரெச்ச மும் பற்றி வாரா என்பது உம், ஆண்டுத் தொகைபெறுதல் சிறுபான்மை என்பது உம் ஆராய்ந்துணர்க என அறிவுறுத்து வார், நினையல் வேண்டும் அவற்றவற்றியல்பே என்ருர்.