பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331 அதுமற் கொண்கன்றேரே என் மன் அசைநிலையாயிற்று. பிறவும் இவ்வாறு பொருள் வேறுபடுவன இச்சூத்திரத்தால் தழுவிக் கொள்ளப்படும். உகூசு. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்த வற் றியலா னுணர்ந்தனர் கொள லே. இஃது இவ்வியலுக் கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்டனவன்றி அவை போல்வன பிறவரினும், அவற்றை முற்கூறிய சொல்லின் இயல்பில்ை உணர்ந்து கொள்க. எ.று. இவ்வியலிற் கூறப்பட்ட இடைச்சொற்கள் வேறுபட வருதலே வழக்கினுட் சார்பும் இடமும் குறிப்பும் பற்றி அறிந்து கொள்ளுமாறு போலவே, கூறப்படாத இடைச் சொற்களின் பொருள் வேறுபாட்டையும் இடமும் சார்பும் குறிப்பும் பற்றி இஃது அசைநில, இஃது இசைநிறை, இது குறிப்பில்ை இன்ன பொருளுணர்த்தும் என்றுணர்ந்து கொள்க என்பதாம், (உ-ம்)- சிறிது தவிர்ந் தீக மரள நின்பரி சிலருய்ம்மார்; 2 எனவும், பலரே தெய்ய வெம் மறையாதீமே! (ஐங்குறு -65) எனவும், அறிவார் யாரஃதிறுவுழியிறுகென எனவும், *அஞ்சுவதோரு மறனே எனவும், பணியுமா மென்றும் பெருமை: எனவும் நிலீஇய ரத்தை நீயே?? (புறம் 375) எனவும், வேய்நரல்’ விடரகம் நீயொன்றுபாடித்தை எனவும், செழுந் தேரோட்டியும் வென்றி எனவும், கோதனன் மர நீ மற்றிசினே எனவும், ஈங்காயினவால் என்றிசின் யானே? எனவும், புனற்கன்னி கொண் டிழிந்த தென்பவே? எனவும், சேவடி சேர்துமன்றே எனவும், மாள, தெய்ய, என, ஒரும், ஆம், அத்தை ,இத்தை, ஈ, இசின், ஆல், என்ப, அன்றே என் பன அசைநிலையாய் வந்தன. குன்றுதொருடலும் நின்றதன் பண்பே எனத் தொறு என்பது தான் சார்ந்த மொழிப் பொருட்குப் பன்மையும் இடமாதலும் உணர்த்தி நின்றது. இது நாடோறு நாடி என நீண்டும் நிற்கும். ஆ என்பது வியப்புஉள்வழியும் மறுத்தல் உள்வழியும் பொருளுணர்த்து