பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 தலும், ஐயென்பது இசை வுள் வழியும் வருத்தம் உள்வழியும் பொருளுணர்த்துதலும் கொள்க. பொம்மென, பொள்ளென, கதுமென இவை விரைவு உணர்த்தின. கொம்மென என்பது பெருக்கம் என்னும் குறிப்புணர்த்திற்று. ஆனம், ஏனம், ஒனம் என்பன எழுத்துச்சாரியை. எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் எனவரும் எகர வினவும், அங்கு, இங்கு, உங்கு, எங்கு என எழுத்தினுள் இடப்பொருளுணர்த்துவனவும், ஆங்கு, ஈங்கு, ஊங்கு என நீண்டு வருவனவும் பிறவாற்றன் வருவ னவும் ஆகிய இடைச்சொல்லெல்லாம் இப்புறனடையாற் றழி இக் கொள்ளப்படும். எண்ணிடைச் சொல்லாகக் கூறப்பட்ட ஒடுவும், கூறப் படாத தெய்ய என்னும் இடைச்சொல்லும் இசை நிறை மொழியாய் வரும் என்பதனை, 485. ஒடுவுந் தெய்யவும் இசை நிறை மொழியே. என்னும் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார். (உ-ம்) முதைப் புனங்கொன்ற வார்கலி யுழவர், விதைக்குறு வட்டி போதொடு பொதுள? (குறுந்-155) எனவும், சொல்லேன் றெய்ய நின்னெடு பெயர்த்தே: எனவும் ஒடுவும் தெய்யவும் இசை நிறையாய் வந்தன .