பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 இசை, குறிப்பு, பண்பு என்னும் மூன்றும் குணப் பண்பும் தொழிற்பண்புமென இரண்டாயடங்குமென்றும், இவ்விருவகைப் பண்பும் பொருட்கு உரிமை பூண்டு நிற்றலின் அப்பண்பை யுணர்த்துஞ்சொல் உரிச்சொல் லெனப்பட்டதென்றும், நட வா முதலிய முதனிலேகளும் தொழிற்பண்பை யுணர்த்துஞ் சொற்களாதலின் அவையெல்லாம் உரிச் சொல்லேயாமென்றுங் கூறுவர் சிவஞான்முனிவர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களே 99 ஆக இளம்பூரணரும், 100 ஆகச் சேவைரையரும் தெய்வச்சிலேயாரும், 98 ஆக நச்சிஞர்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள் இவ் வியல் முதற்குத்திரத்தால் உரிச்சொற்கு இலக்கணமுணர்த்திய தொல்காப்பியர், உரிச் சொற்களின் பொருளை யுணருங்கால் அவை பெயரும் வினையும் போல ஈறுபற்றி உணர்தலாகாமை வின் பொருள் வெளிப்படாத உரிச்சொற்கள் பொருள் வெளிப் பட்ட சொல்லொடு சார்த்தி அச்சொற்களையே எடுத்தோதி கண்டுப் பொருளுணர்த்தப்படும் என இவ்வியல் இரண்டாஞ் சூத்திரத்துத் தோற்றுவாய் செய்து கொண்டு, இவ்வியலில் 8 முதல் 91 வரையுள்ள சூத்திரங்களால் உறு’ என்பது முதல் எறுழ் என்பது ஈருக நூற்றிருபது உரிச்சொற்களை எடுத் தோதிப் பொருள் உணர்த்துகின்ருர் 92 முதலாக இவ் இயலின் பின்னுள்ள சூத்திரங்களால் உரிச் சொற்களின் பொருளுணரும் முறையும் பொருளுணர்த்து முறையு முதலாயின உணர்த்தப் பெறுகின்றன. உகளை, உரிச்சொற் கிளவி விரிக்குங் காலே இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி பெயரினும் வினையினும் மெய்தடு மாறி ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும் பலசொல் லொருபொருட் குரிமை தோன்றினும் பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்த மரபிற் சென்றுநில மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்.