பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335 இச்சூத்திரம் உரிச்சொற்கெல்லாம் பொதுவிலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) உரிச் சொல்லே விரித்துக்கூறுமிடத்து, இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்மேல் தோன்றி, பெயரிடத் தும் வினேயிடத்தும் தம்முருபு தடுமாறி, ஒருசொல் பல பொருட்கு உரித்தாய் வரினும், பலசொல் ஒருபொருட்கு உரித்தாய் வரினும், வழக்கிற் பெருகவழங்காத சொல்லப் பயின்று வழங்கும் சொல்லொடு சார்த்திப் பெயரும் வினையு மாகிய தத்தமக்குரிய நிலைக்களத்தின்கண் யாதானும் ஒரு சொல்லாயினும் வேறு வேறு பொருளுணர்த்தப்படும். எ-று. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளையுடையனவாய் பெயரையும் வினே யையும் போன்றும் அவற்றிற்கு முதனிலை யாகியும் தம்முருபு தடுமாறி, ஒருசொல் ஒரு பொருட்கு உரித் தாதலேயன்றி, ஒருசொல் பலபொருட்கும் பலசொல் ஒரு பொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்லாம் என்றும், அவை பெயரும் வினேயும் போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லா காமையின், வெளிப்படப் பொருளுணர்த்தாதனவற்றை வெளிப்படப் பொருளுணர்த்தும் சொற்களோடு சார்த்தித் தம்மையே எடுத்தோதிப் பொருளுணர்த்தப்படும் என்றும் உரிச்சொற்கெல்லாம் பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொரு ளுணர்த்தும் முறையும் உணர்த்தியவாறு.

  • மெய் என்பது பொருள். தடுமாறுதல் என்பது பெயர் பற்றியும் வினைபற்றியும் வரும் வரவினை நோக்கி. அவ்வாறு தடுமாறுங்கால் ஒருசொல் பலபொருட்கு உரிமைப்பட்டுத் தடு மாறுதலும், பலசொல் ஒருபொருட்கு உரிமைப்பட்டுத் தடுமாறு தலும் உடைய. அவை அவ்வாறு தடுமாறித் தோன்றுதல் அவற்றிற்கு இலக்கணம் என்பர் இளம்பூரண்ர். மெய்தடு மாறுதல் - தம்முருபு தடுமாறுதல் எனவும், பெயரினும் வினே யினும் தம்முருபு தடுமாறுதலும் ஒருசொல் பல பொருளுணர்த் தலும் பலசொல் ஒரு பொருளுணர்த்தலும் உரிச்சொல்லின்கண் அமைந்துள்ளமை பற்றி ஆசிரியர் அவற்றை இங்கு எடுத் தோதினராயினும், உரிச்சொற்கேயுரிய சிறப்பிலக்கணமாவது