பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337 பெயர் வினேகளேவிட்டு நீங்காமல் அவற்றைச் சார்ந்து, செய் யுட்கே சிறப்புரிமை யுடைய வாய் வருவன உரிச்சொல் என் பார், பெயர் வினை ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்? என்றர். இவ்வாறு பண்புக்கு உரிமைபூண்டு வரும் உரிச்சொற்களின் பொருளே விளக்கவந்த நன்னூலார், அச்சொற்களாலுணர்த்தப் படும் பலவகைப் பண்புக்ளேயும் உரிச்சொல்லியலில் 2 முதல் 14 வரையுள்ள 12. சூத்திரங்களால் விரித்துணர்த்துகிருச். பண்பாவது இதுவென விளக்கவந்த நன்னூலார், 442. உயிருயி ரில்லாதாம் பொருட்குணம் பண்பே' என்றர். உலகத்து உயிருள்ளதும் உயிரில்லதும் ஆகிய இரு வகைப் பொருள்களின் குணம் பண்பு எனப்படும்?? என்பது இதன்பொருள். கண் முதலிய பொறிகளாற் கண்டுணர்தற்கியலாத அருவப் பொருளாகிய உயிர்களே அவை பெற்றுள்ள காணப்படும் உடம் புகளாற் கண்டுணர்ந்து அவற்றின் உடம்புகளிற் பொருந்திய மெய், நா, மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளையும் அகக்கருவியாகிய மனத்தையும் வாயிலாகக் கொண்டு அவ் வுயிர்கள் பெறும் ஒரறிவு முதல் ஆறறிவு ஈருகவுள்ள அறிவின் வளர்ச்சிக்கேற்ப அவற்றை ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை அறுவகையுயிர்களாகப் பண்டைத் தமிழ் நூலோர் பகுத் துரைப்பர். இப்பகுப்பு முறையினே விரித்துரைப்பது, 'ஒன்றறிவதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதைெடு நாவே மூன்றறி வதுவே அவற்ருெடு மூக்கே நான்கறி வதுவே அவற்ருெடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்ருெடு செவியே ஆறறி வதுவே அவற்ருெடு மனனே நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே?? (தொல்-மரபு-27) எனவரும் மரபியற் சூத்திரமாகும். தொட்டால் அறிவதாகிய ஊற்றுணர்ச்சி யொன்றை யுடையது ஓரறிவுயிர். பரிசவுணர்ச்சியாகிய அதைெடு சுவை