பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 யறிதலாகிய நாவுணர்வும் உடையது ஈரறிவுயிர். இவ்விரண்டு டன் மூக்கினல் முகர்ந்தறிதலாகிய நாற்றவுணர்ச்சியும் உடை யது மூவறிவுயிர். இம்மூவகை யுணர்வுடன் கண்களாற் கண்டறிதலாகிய ஒளியுணர்ச்சியும் பெற்றது நாலறிவுயிர். இந்நால்வகை யுணர்வுடன் ஒசையறிதலாகிய செவியுணர்வும் வாய்க்கப்பெற்றது. ஐயறிவுயிராகும். மேற்குறித்த ஐம்பொறி யுணர்வுகளுடன் மனத்தால் எண்ணி யுணர்வதாகிய உய்த் துணர்வும் பெற்று விளங்குவது ஆறறிவுயிராம் என இவ்வாறு உயிர்களின் இயல்பினை உள்ளவாறுணர்ந்தோர் அவற்றை அறுவகையுயிர்களாக முறைப்படுத்து உணர்த்தினர்கள்: என்பது இச் சூத்திரத்தின் பொருளாகும். மனனுணர்வுடைய மக்களேயும் தேவர் நரகர் என்பவர் களேயும், விலங்கு பறவை முதலிய ஐயறிவுடைய உயிர் வகையுள் அடக்கி, ஐவகையுயிர்களாக வகைப் படுத்துதல் சமண்சமயக் கோட்பாடாகும். சமண முனிவராகிய பவணந்தி யார் தம் சமயச் சான்ருேர் கூறிய ஐவகையுயிர்ப் பாகுபாட்டி னேயே தாமும் கொண்டு, 448. மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின் ஒரறி வாதியா உயிரைந் தாகும். எனச் சூத்திரஞ் செய்துள்ளார். மெய், நா, மூக்கு, கண், செவி ஆகிய ஐம்பொறிகளினுள்ளும் ஒன்று முதலாகக் கீழ் நின்றதனையும் மேல்மேற் பெற்று அறிதலால் ஒரறிவுயிர் முதலாக உயிர் ஐவகைப்படும்?? என்பது இதன் பொருள். புல்லும் மரனும் ஒரறிவுடையன; அவ்வகையைச் சார்ந் தன பிறவும் உள எனக் கூறுவது, ‘புல்லும் மரனும் ஒரறி வினவே பிறவும் உளவே அக்கிளேப் பிறப்பே? (தொல்-மரபு-28) என்பதாகும். இதனை அடியொற்றியமைந்தது, 444. புன்மர முதல உற்றறியும் ஓரறிவுயிர். என வரும் நன்னூற் சூத்திரமாகும்.