பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339 நந்தும் முரளும் ஈரறிவுடையன; அவ்வகையைச் சார்ந் தன. பிறவும் உளவெனக் கூறுவது, 'நந்து முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளேப் பிறப்பே (தொல் - மரபு-29) என்பதாகும். இதனைப் பின்பற்றியமைந்தது, 445. முரள் நந் தாதி நாவறிவோ டீரறிவுயிர். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். முரள்-இப்பி. நந்துநத்தை . சிதலும் எறும்பும் மூவறிவுடையன; அவ்வகையைச் சார்ந் தன. பிறவும் உளவெனக் கூறுவது, 'சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளேப் பிறப்பே? (தொல் மரபு-89) என்பதாகும். இதனை அடியொற்றியமைந்தது, 446. சிதலெறும் பாதிமூக் கறிவின் மூவறிவுயிர். என்னும் நன்னூற் சூத்திரமாகும். சிதல்-கறையான், நண்டும் தும்பியும் நான்கறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள எனக் கூறுவது, நண்டுந் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே: (தொல். மரபு-81) என்பதாகும். இதனைப் பின்பற்றியமைந்தது, 447. தும்பிளுெண் டாதிகண் ணறிவின் நாலறிவுயிர். என்னும் நன்னூலாகும். நாற்கால் விலங்காகிய மாவும் பறவையும் ஐயறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள எனவும், மனவுணர் வுடைய ஆறறிவுயிர் எனச் சிறப்பித்துரைக்கப்படுவோர் மக் களே; அவ்வகையைச் சார்ந்தன. பிறவும் உளவாம் எனவும் அறிவுறுத்துவன: