பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 மாவும் புள்ளும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளேப் பிறப்பே?? (தொல்மரபு-83) எனவும், 'மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளேப் பிறப்பே2 (டிை. 34) எனவும் வரும் மரபியற் சூத்திரங்களாகும். புறத்தே காணப்படும் ஐம்பொறிகளின் வாயிலாக அறியும் ஐயறிவுயிர்களுடன் புறத்தேகாணப்படாத அகக் கருவியாகிய மனத்தால் உணரும் உண்ர்வு மிகுதியுடைய மக்கள் முதலி யோரையும் இயைத்து ஐயறிவுயிர்களாகக் கூறுவது, 448. வானவர் மக்கள் நரகர் விலங்குபுள் ஆதி செவியறிவோ டையறி வுயிரே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். அஃதேல் அவர் (தொல்காப்பியர்ை) ஆறறிவுயிரும் ஒன்றுண்டென்ருராலோ வெனின், அவர் மனத்தையும் ஒரு பொறியாக்கி, அதன்ை உணரும் மக்களையும் விலங்கினுள் ஒரு சாரனவற்றையும் ஆறறிவுயிரென்ருர்; இவர் (பவனந்தியார்) அம்மனக்காரியம் மிகுதிகுறைவால் உள்ள வாசி (வேறுபாடு) அல்லது அஃது எல்லாவுயிர்க்கும் உண்டென்பார் மதம்பற்றி இவ்வாறு சொன்னரென்க?’ என மயிலேநாதர் கூறும் விளக்கம் இங்கு நினைத்தற்குரியதாகும். உயிரில் பொருள்களாவன இவையென உணர்த்தப் போந்த நன்னூலார், 449. உணர்விய லாமுயி ரொன்று மொழித்த உடல்முத லனேத்தும் உயிரல் பொருளே. என்ருர், 'அறிவு மயமாயுள்ள உயிரொன்றையும் ஒழிந்து நின்ற உடம்பு முதலாயுள்ள உலகத்துப் பொருள்களெல்லாம் உயிரில் லாத பொருள்களாகும்.’’ என்பது இதன் பொருள்,