பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் என்பதனுன் ஐம்பாலுணர்த்துதற் சிறப்புடைய படர்க்கை வினை பற்றி யோதி குரேனும், தன்மைச் சொல்லே அஃறிணைக்கிளவி என்றும் முன்னிலை சுட்டிய ஒருடிைக்கிளவி என்றும் பெயர் வழுவமைப் பாராகலின் தன்மை முன்னிலைப் பாலறி கிளவியும் மயங்கற்க என்பது இங்குக் கொள்ளப்படும். (உ-ம்) நீ வந்தாய், நீயிர் வந்தீர், யான் வந்தேன், யாம் வந்தேம் என வரும். இவ்வாறன்றித் திணையும் பாலும் இடமும் காலமும் மாறிவருவன வழுவாம். இனி, மயங்கல் கூடா எனவே மயக்கமும் உண்டென்பதும் அங்ங்னம் மயங்குதல் வழுவென்பதும் கூறினராயிற்று. அங்ங்னம் மயங்கும் வழு எழுவகைப்படும்; திணை வழு, பால் வழு, இடவழு, காலவழு, மரபுவழு, செப்புவழு, விவைழு ೯T6T. இருதினையுள் ஒரு தினச் சொல் ஏனைத்திணைச் சொல்லொடு முடிவது தினேவழு. ஒரு தினேயுள் ஒரு பாற்சொல் ஏனைப் பாற்சொல்லொடு முடிவது பால்வழு. தன்மை முன்னிலே படர்க்கை என்னும் மூவிடச் சொற்களுள் ஓரிடச்சொல் பிற விடச் சொல்லொடு முடிவது இடவழு. இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் ஒரு காலத்தினக் குறித்த சொல் ஏனக் காலச் சொல்லொடு முடிவது காலவழு. வினவுக்கு ஏற்ற விடையாகாதது செப்புவழு. வினவுதற்கு உரியதல்லாத பொரு ளேப்பற்றி வருவது விவைழு. ஒரு பொருட்குரிய வழக்குச் சொல் மற்றெருபொருள் மேற் சென்றது மரபு வழு. இவ்வெழுவகை வழுக்களேயும், 375. தினேயே பால் இடம் பொழுது வி ைஇறை மரபாம் ஏழும் மயங்கின் ஆம் வழுவே. எனவரும் சூத்திரத்தால் தொகுத்தோ திர்ை நன்னூலார். (உ-ம்) அவன் வந்தது, தினேவழு. அவன் வந்தாள், பால்வழு. யான் வந்தான், இடவழு. நாளே வந்தான், காலவழு. ஒரு விரலேக்காட்டி இது சிறிதோ பெரிதோ என வினவுவது