பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 (உ-ம்) துணிகூர் எவ்வமொடு’ எனவும், கழி கண் ணுேட்டம் எனவும் கூர்ப்பு, கழிவு என்பன ஒன்றனது சிறத் தலாகிய குறிப்பையுணர்த்தின. உள்ளது சிறத்தல் என்றது, முன்சிறவாது சுருங்கியுள்ளது பின் சிறந்து பெருகுதல் என்னும் குறிப்பினதாகும். இதனே மிகுதியென்னும் பொருளில் அடக் குவர் நன்னூலார். (நன்னூல் உரி 455) டேகடு கதழ்வுந் துனேவும் விரைவின் பொருள. (இ-ள்) கதழ்வு, துனேவு, என்னும் உரிச்சொற்கள் இரண்டும் விரைவாகிய குறிப்பினைப் பொருளாக உடையன. எ-று. (உ.ம்) கதழ் பரி நெடுந்தேர்? எனவும், துனைபரி நிவக்கும் புள்ளின்மான* எனவும் கதழ்வும் துனேவும் விரை வென்னும் குறிப்புணர்த்தின. நடகசு. அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும். (இ-ள்) அதிர்வு, விதிர்ப்பு என்னும் உரிச்சொற்கள் இரண்டும் நடுக்கமாகிய குறிப்புணர்த்துவன. எ-று. (உ-ம்) அதிர வருவதோர் நோய் (திருக்--429) என வும் விதிர்ப்புறவறியா ஏமக் காப்பினே? (புறம்--20) எனவும் நடுக்கமாகிய குறிப்புணர்த்தின.

  • அதிழ்வென்று பாடம் ஓதி, அதிழ்கண முரசம் என்று உதாரணங்காட்டுவாரும் உளர். என்பர் சேணுவரையர்.

ங்கள். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்வும் நெடுமையுஞ் செய்யும் துெ.ாருள. (இ-ள்) வார்தல், போகல், ஒழுகல் என்னும் மூன்று சொல்லும் நேர்மையும் நெடுமையும் ஆகிய வண்புணர்த்தும். எ-று. (உ-ம்) வார்ந்திலங்கும் வையெயிற்றும் எனவும், வார் கயிற்ருெழுகை எனவும் வார்தல் என்னும் உரிச்சொல்