பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

349 முறையே நேர்மையும் நெடுமையும் உணர்த்தியது. போகு கொடி மாங்-ல் எனவும், வெள்வேல் விடத்தரொடு காகுடை போகி' எனவும் போகல் என்னும் உரிச்சொல் முறையே நேர்மையும் நெடுமையும் உணர்த்தியது. ஒழுகு கொடி மருங்குல்' எனவும் மால்வரையொழுகிய வாழை எனவும் ஒழுகல் என்னும் உரிச்சொல் முறையே நேர்மையும் நெடுமையும் உணர்த்தியது. உகஅ, தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட் டாகும். (இ-ள்) தீர்தல், தீர்த்தல் என்னும் இரண்டுரிச் சொற் களும் விடுதலாகிய குறிப்புணர்த்தும். எ-து. (உ.ம்) துணையிற் றீர்ந்த கடுங்கண் யானே? எனவும், 'நங்கைய்ைச் செற்ற தீங்கு தீர்த்தனர் கொண்மின் எனவும் தீர்தல், தீர்த்தல் என்பன விடுதலாகிய குறிப்புணர்த்தின. இவை தன்வினை பிறவினைகட்குப் பொதுவாய் நின்றன எனவும், இவை பிறவினையாங்கால் தீர்வித்தல், தீர்ப்பித்தல் என வாய்பாடு வேறுபட்டு இக்காலத்து வழங்கும் எனவும், பிளத்தல், அணங்கல் என்ருற் போலத் தன் வினே பிறவினைக் குப் பொதுவாய் வருவனவும் ஒன்றென முடித்தல் என்பதனற் கொள்க எனவும் கூறுவர் நச்சினுர்க்கினியர். ங்ககூ. ஆதிகடவரல் பண்ணே யாயிர்ண்டும் விளையாட்டு. (இ-ள்) கிகடவரல், பண்ணை என்னும் அவ்விரண்டு சொற்களும் விளையாட்டு என்னும் குறிப்புணர்த்தும். எ.று. (உ-ம்) கெடவர லாயமொடு” எனவும் பண்ணேத் தோன்றிய எண்ணுன்கு பொருளும்’ எனவும் அவ்விரு சொற் களும் விளையாட்டாகிய குறிப்புணர்த்தின. கூஉம். தடவுங் கயவும் நளியும் பெருமை. (இ.கள்) தட, கய, நளி என்னும் மூன்றுரிச் சொற்களும் பெருமையென்னும் பண்புணர்த்துவன. எ.று.