பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வினு வழு. கடம்பூர்க்கு வழி யாது?’ என வினவில்ை இவ் வண்டியில் இடப்பக்கத்திற் பூட்டப்பட்டுளது என் பசுவின் கன் றன்று’ என்று மறுமொழி கூறுவது இறை (செப்பு) வழு. யானை மேய்ப்பான இடையன் என்றும் ஆடு மேய்ப்பானைப் பாகன் என்றும் சொல் வழக்கின் மரபுணராது கூறுவது மரபு வழு. இவ்வேழு வகையானும் சொற்கள் வழுவாமற் காத்தலே வழுக்காத்தலெனப்படும். வழுவற்க என்றலும், வழுவமைத்தலும் என வழுக்காத்தல் இருவகைப்படும். குறித்த பொருளே அதற்குரிய சொல்லாற் சொல்லுக என்றல் வழுவற்க என்றலாம். குறித்த பொருளுக் குரிய சொல்லன்ருயினும் ஒருவாற்ருல் அப்பொருள் தருதலின் அமைத்துக் கொள்க என அமைதி கூறுதல் வழுவமைத்த லாகும். கிளவியாக்கத்தில் விக-ஆம் சூத்திர முதலாகவுள்ள சூத்திரங்கள் மேற்கூறிய இருவகையானும் வழுக்காக்கும் முறை யில் அமைந்துள்ளன. மயங்கல்கூடா தம்மரபினவே” என்ற தொடரினே யோக விபாகம் (கூட்டிப்பிரித்தல்) என்னும் நூற்புணர்ப்பினுல் மயங்கல் கூடா எனவும் தம்மரபினவே எனவும் பிரித்து இரு தொடராக்கிச் சொற்கள் மரபு பிறழா தம்மரபினவே” என மரபுவழுக் காத்ததாக வுரைப்பர் சேனவரையர். ல்உ. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி ஆண்மை யறிசொற் காகிட னின்றே. இது, வழுவற்க என்கின்றது. (இ-ள்) (உயர்திணை மருங்கிற் பால் பிரிந்திசைக்கும்: என மேற்கூறப்பட்ட) ஆண்மைதிரிந்த பேடி என்னும் பெயர்ச்சொல் ஆண்பாற் சொல்லொடு புணர்தற்குப் பொருந்தும் இடனுடைத்தன்று. எ-று. ஆண்மை யறிசொற்கு ஆகிடன் இன்று’ என்ற விலக்கு ஆண்மை யறிசொல்லொடு புணர்தல் எய்திநின்ற பேடிக்கு அல்லது ஏலாமையின் அலிமேற் செல்லாதென்பர் சேனவரையர்.