பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357 'முழக்கு, இரட்டு, ஒலி, கலி, இசை, துவை, பிளிறு, இரை, இரங்கு, அழுங்கு, இயம்பல், இமிழ், குளிறு, அதிர், குரை, கனே, சிலே, கம்மை, கவ்வை, கம்பலே, அரவம், ஆர்ப்பு ஆகிய இருபத்திரண்டும் இவை போல்வன பிறவும் ஓசையென்னும் ஒரு குணத்தையுணர்த்தும் உரிச்சொற்களாம் என்பது இதன்பொருள். (உ-ம்) முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ குடிஞை யிரட்டுங் கோடுயர் நெடுவரை, கலி கெழு மூதூர்’, 'பறை யிசை யருவி: , தோல் துவைத்தல்?, பிளிறு வார் முரசம்: இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள்’, ‘இரங்கு முரசின் , ‘அழுங்கன் மூதூர் , காலேமுரசம தியம்ப9, இமிழ்கடல் வளைஇய’, ‘குளிறு முரசங்குணில்பாய2, களிறு களித் ததிருங் கார்: , குரைபுனற் கன்னி2, 'கனைகடற் சேர்ப்ப2, *சிலேத்தார் முரசங் கறங்க. 'தள்ளாத சும்மை மிகு தக்கின நாடு?, கெளவை நீர்வேலி: , வினைக்கம்பலே ம.இனச் சிலம் பவும்: , அறை கடலரவத்தானே?, ஆர்த்த பல்லியக்குழாம்? என முழக்கு முதல் ஆர்ப்பு ஈருகவுள்ள இருபத்திரண்டுரிச் சொற்களும் ஒசையென்னும் ஒரு குணத்தையுணர்த்தினமை காண்க. கூடும். அவற்றுள். அழுங்க லிரக்கமுங் கேடு மாகும். (இ-ள்) அழுங்கல் என்னும் உரிச்சொல் அரவம் என்னும் இசைப்பொருண்மையே யன்றி இரக்கமுங்கேடுமாகிய குறிப் புணர்த்தும். எ-று. (உ-ம்) பழங்கண்ணுேட்டமு நலிய அழுங்கினனல்லனே? எனவும், குணனழுங்கக் குற்றம் உழை நின்று கூறுஞ் சிறிய வர்க்கு எனவும் அழுங்கல் என்னும் சொல் இரக்கம், கேடு என்னும் குறிப்புணர்த்தியது. கூடுக. கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும். (இ-ள்) கழும் என்பது மயக்கமாகிய குறிப்புணர்த்தும். எ-று . (உ-ம்) கழுமிய ஞாட்பு’ எனவரும்.