பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363 ங்.என். மதவே மடனும் வலியு மாகும். (இ-ள்) மதவென்னும் உரிச்சொல் மடன், வலி ஆகிய குறிப்புணர்த்தும். எ-று. (உ-ம்). பதவு மேய்ந்த மதவு நடை நல்லான் எனவும், 'கயிறிடு கதச் சேப்போல மதமிக்கு எனவும் மடனும் வலியு மாகிய குறிப்புணர்த்தியது. டி.எ.அ. மிகுதியும் வனப்பு மாகலு முரித்தே. (இ-ள்) மதவென்னுஞ்சொல் மடனும் வலியுமேயன்றி மிகு தியும் வனப்புமாகிய குறிப்பும் சிறுபான்மை யுணர்த்துதற்குரிய தாம். எ-று. உ-ம். மதவிடை எனவும், மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே? எனவும் மதவென்பது மிகுதியும் வனப்புமாகிய குறிப் புணர்த்தியது. மதவிட்ை என்புழி மிகுதி என்றது உள்ள மிகுதியினே. க.எகூ. புதிது படற் பொருட்டே யாணர்க் கிளவி, (இ-ள்) யாணர் என்பது, வருவாய் புதிதாகப் படுதலாகிய குறிப்புணர்த்தும். எ.று. (உ-ம்) மீைெடு பெயரும் யாணரூர* எனவரும். ங்,அம். அமர்தன் மேவல். ந. அக. யானுக் கவி ம்ை. (இ-ள்) அமர்தல் என்னும் சொல் மேவுதல் என்னுங் குறிப்புணர்த்தும். யானு என்னுஞ்சொல் கவின் என்னுங் குறிப்புணர்த்தும். எ-று. (உ-ம்) அகனமர்ந்து செய்யாள் உறையும்? என அமர் தல் மேவுதல் என்னும் குறிப்புணர்த்தியது. யானது பசலே: என யானு என்பது கவின் (அழகு) என்னுங் குறிப் புணர்த்தியது.