பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

369 ங்கசை. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்ரு. இது, சொற்கள் காரணமுடையன என்பது கூறுகின்றது. (இ-ள்) உறு, தவ முதலாயின சொற்களுக்கு மிகுதி முதலாயின பொருளாதல் வரலாற்று முறைமையாற் கொள்வ தல்லது அவை அப்பொருளின யுடையவாதற்குரிய காரணம் விளங்கத்தோன்ரு. எ.று. பொருளொடு சொற்கு இயைபு இயற்கையாகலான், அவ்வியற்கையாகிய இயைபால், சொல் பொருள் உணர்த் தும் என்ப. ஒரு சாரார் பிற காரணத்தான் உணர்த்தும் என்ப. அவற்றுள் மெய்ம்மையாகிய காரணம் ஆசிரியர்க்குப் புலனுவதல்லது நம்மனுேர்க்குப் புலனுகாமையின், மொழிப் பொருட் காரணம் இல்லை. என்னுது, விழிப்பத் தோன்ரு? என்ருர் . அக்காரணம் பொதுவகையான் ஒன்ருயினும் சொற் ருெறும் (வேறுவேறு) உண்மையிற் சிறப்பு வகையாற் பல வாம். அதனு ன் (விழிப்பத் தோன்ருது என ஒருமையாற் கூருது) விழிப்பத்தோன்ரு: எனப் பன்மையாற் கூறினர் என விளக்குவர் சேனவரையர். விழிப்பத் தோன்றுதல் - விளங்கத் தோன்றுதல். 'உரிச்சொற்பற்றி யோதினுரேனும் ஏனைச் சொற்பொருட்கும் இஃது ஒக்கும்? என இச் சூத்திரத்துச் சேவைரையர் கூறும் உரைக்குறிப்பினே யுளங்கொண்ட நச்சினர்க்கினியர் மேற் கூறுகின்ற பொது விலக்கணமாகிய எச்சவியற்கு ஏற்ப அதிகாரப்பட்டமை நோக்கி இவ்வியலில் பொருட்குப் பொரு டெரியின், (க.க.க) என்பது முதல், எழுத்துப் பிரிந்திசைத் தல் (ங்கூடு) என்பது வரையுள்ள ஐந்து சூத்திரங்களிலும் முற்கூறிய நால்வகைச் சொல்லேயும் உணருமாறும் உணர்த்து மாறும் அவற்றின் தன்மையும் உணர்த்துகின்ருர் என விளக்கி யுள்ளார். நடகூடு. எழுத்துப் பிரிந்திசைத்த லிவணியல் பின்றே, இஃது உரிச்சொற்குரியதோர் இயல்பு கூறுகின்றது.