பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 முதல் 45 வரையுள்ளவை முன்னர்க் கூறப்படாது எஞ்சிய பிரிநிலே முதலிய பத்து வகையெச்சங்களின் முடிபு கூறுவன. 46 முதல் 65 வரையுள்ள சூத்திரங்கள் ஒருசார் மரபு வழுக் காத்தல், மரபிலக்கணம், விகாரம், வினையெச்சத்திரிபு, இரட் டைக் கிளவி, ஆற்றுப்படைச் செய்யுள் முடிபு என முன்னர்க் கூருதெஞ்சிய சொல்லிலக்கணம் உணர்த்துவன. இறுதியி லுள்ள 66-ஆம் சூத்திரம் இச்சொல்லதிகாரத்துக்குப் புறன டையாகும். ங்களை, இயற்சொற் றிரிசொற் றிசைச் சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே. இது, செய்யுட்குரிய சொல் இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) இயற்சொல்லும் திரிசொல்லும் திசைச்சொல்லும் வடசொல்லும் என அத்துனேயே செய்யுள் செய்தற்குரிய சொல்லாவன. எ-று. இயற்சொல்லாலும் செய்யுட் சொல்லாகிய திரிசொல்லா லுமேயன்றித் திசைச் சொல்லும் வடசொல்லும் விரவிச் சான்ருேர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனே மொழிச்சொற் களும் செய்யுள் செய்தற்குரியனவோ என்று ஐயுற்ருர்க்கு, இயற்சொல் முதலிய இந்நான்குமே செய்யுட்குரியன;பிறமொழிச் சொற்கள் உரியன அல்ல? என்று வரையறுத்தவாரும். செய்யுள் செய்தலாவது, ஒருபொருள் மேற் பலசொற் கொணர்ந்து ஈட்டலாதலின் ஈட்டச்சொல் என்ருர். இயற்சொல், பெயர்வினை இடை உரி என்னும் நான்கு வகையாலும் செய்யுட்குரித்து. திரிசொற் பெயராயல்லது வாரா. திசைச்சொல்லுள் ஏனேச் சொல்லும் உளவேனும், செய்யுட் குரித்தாய் வருவது பெயர்ச்சொல்லேயாம். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரியவாய் வாரா என்பர் சேவைரையர். இச்சொற் பாகுபாட்டினை நன்னூல் 269-ஆம் சூத்திரத் திற் பவணந்தியார் குறித்துள்ளமை முன்னர் (ப்பெயரியலுள்) விளக்கப்பெற்றது.