பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 270. செந்தமி ழாகித் திரியா தியார்க்குந் தம்பொருள் விளக்குந் தன்மைய வியற்சொல். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். செந்தமிழ் நிலத்து மொழியாய்ச் சொல்லாலும் பொரு ளாலுந் திரியின்றிக் கற்ருர்க்கும் கல்லாதார்க்கும் ஒப்பத் தம் பொருள் விளக்கும் இயல்பினையுடையன இயற்சொல்லாம்: என்பது இதன் பொருள். மண், பொன் என்றற்ருெடக்கத்தன பெயரியற்சொல். நடந்தான், வந்தான் என்றற்ருெடக்கத்தன வினையியற்சொல். அவனே, அவல்ை என்றற்ருெடக்கத்துவரும் வேற்றுமையுருபு முதலியன இடையியற்சொல்? என உதாரணங்காட்டுவர் சிவஞானமுனிவர். ங்ககூ. ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி. இது, திரிசொற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) ஒருபொருள் குறித்துவரும் பலசொல்லும் பல பொருள் குறித்துவரும் ஒருசொல்லும் என இரு வகையினை யுடையது திரிசொல் என்பர் ஆசிரியர். எ-று. (உ-ம்) வெற்பு, விலங்கல், விண்டு என்பன மலே என்னும் ஒரு பொருள்குறித்த பல பெயர்த்திரிசொல். எகினம் என்பது, அன்னம், கவரிமா, புளி, நீர்நாய் என்னும் பலபொருள் குறித்த ஒருபெயர்த் திரிசொல். படர்ந்தான், சென்ருன் என்றற்ருெடக்கத்தன ஒரு பொருள் குறித்த பல வினைத்திரி சொல். துஞ்சினர், ஒதுங்கினர், மாண்டது என்றற்ருெடக்கத் தன பலதொழில் குறித்த ஒரு வினைத்திரிசொல். தில், மன், மற்று, கொல் என்னுந் தொடக்கத்தன பலபொருள் கருதிய ஒரிடைத்திரி சொல். கடியென் கிளவி முதலாயண் பல குணந் தழுவிய ஒருரித்திரிசொல்.