பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

377 திரிசொல்லது திரிவாவது உறுப்புத் திரிதலும் முழுவதும் திரிதலும் என இருவகைத்து. கிள்ளே, மஞ்ஞை என்பன உறுப்புத்திரிந்தன. விலங்கல், விண்டு என்பன முழுவது ந் திரிந்தன. திரிபுடைமையே திரிசொல்லிற் கிலக்கணமாதல் சொல்லின்முடிவின் அப்பொருள் முடித்தல் என்பதனு ற் பெறவைத்தார் என்பர் சேனவரையர், இச் சூத்திரத்தை அடியொற்றி யமைந்தது, 271. ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும் பலபொருள் குறித்த வொருசொல் லாகியும் அரிதுனர் பொருளன திரிசொல் லாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 'ஒரு பொருளேக் கருதிய பலசொல்லாகியும் பல பொரு ளேக் கருதிய ஒரு சொல்லாகியும், கல்லாதார்க்கு அறியலாகாப் பொருளையுடையன திரிசொல்லாம்?? என்பது இதன் பொருள். இச் சொல்லிற்கு வேருேர் இயற்சொற் கொடுவத்து திரித்துச் சொல்ல வேண்டுதலால் திரிசொல்லெனக் கொள்க: என்பர் மயிலைநாதர். ஈண்டு இயற்சொல் திரிசொல் என்றது, அவற்றின் எழுத்துக்கள் திரியாமையும் திரிந்தமையும் கருதியன்று, கல்வி யே துவானன்றி இயல்பாகத் தம் பொருளேயுணர நிற்றலின் இயற்சொலென்றும் அவ்வியல்புக்கு மறுதலைப் பட்டுக் கல்வியே துவால் தம் பொருளேயுணர நிற்றலின் திரிசொல் என்றும் கூறப் பட்டது. என்பர் சிவஞானமுனிவர். பலசொல் ஒருபொருட் குரியவாதலும் ஒருசொல் பல பொருட்குரியவாதலும் உரிச்சொல் முதலாகிய இயற்சொல்லுக் கும் உண்மையால், இயற்சொற் போன்று எல்லார்க்கும் எளிதிற் பொருளுணர நிற்றலன்றிக் கற்ருரல்லாத மற்ருேர்க்கு அரிதிற் பொருளுணர நிற்றல் திரிசொற்குரிய இலக்கணமாம் என விளக்குவார், அரிதுனர் பொருளன திரிசொல் லாகும்: என்ருர் பவணந்தியார்.