பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 சள. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்து ந் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி. இது, திசைச் சொற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) செந்தமிழ் வழக்கைப் பொருந்திய பன்னிரு நிலங்களிலும் அவ்வந்நிலத்து வாழ்வார்தம் குறிப்பினேயே பொருளாகக்கொண்டு வழங்குவன திசைச்சொற்களாம். எ-று. வட வேங்கடந் தென்குமரி யிடைப்பட்ட தமிழகம் தொல்காப்பியனர் காலத்துப் பன்னிரு நிலங்களாகப் பகுக்கப் பட்டிருந்த தென்பது செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்: என்னும் இச்சூத்திரத் தொடராற் புலம்ை. பன்னிரு நிலமாவன பொங்கர்நாடு,ஒளிநாடு, தெ ன்பாண்டிநாடு குட்டநாடு குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சத நாடு, பூழி நாடு, மலே நாடு, அருவா நாடு, அருவா வடதலை எனச் செந்தமிழ் நாட்டுத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பா லிறுதியாக எண்ணிக்கொள்க: என்பர் சேனவரையர். செத்தமிழ் சேர்ந்த? என்னுந் தொடர்க்கு இளம்பூரணர் சேகுவரையர் முதலிய உரையாசிரியர்கள் செந்தமிழ் நிலத் தைச் சேர்ந்த எனப் பொருள்கொண்டு, செந்தமிழ் நாடு வேறு அதனைச் சேர்ந்த பன்னிரு நிலம் வேறு எனவும், செந் தமிழ் நிலமல்லாத ஏனைய பன்னிரு நிலத்தும் அவ்வந் நிலத் தார் குறிப்பின் வழி வழங்குவன திசைச் சொற்களாம் எனவும் கூறினர். குடநாட்டார் தாயைத் தள்ளே என்றும், பூழிநாட் டார் நாயை ஞமலி என்றும், சிறு குளத்தைப் பாழி யென்றும் தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றம் என்றும் தம்மாமி என்பதனைத் தந்துவையென்றும், குடநாட் டார் தந்தையை அச்சனென்றும், கற்கா நாட்டார் வஞ்சரைக் கையரென்றும், சீதநாட்டார் ஏடாவென்பதனே எலுவனென் றும் தோழியை இகுளேயென்றும், அருவா நாட்டார் செய்யைச் செறுவென்றும் சிறுகுளத்தைக் கேணியென்றும், அருவா வட தலையார் குறுணியைக் குட்டையென்றும் வழங்குவன திசைச் சொற்களாம்.