பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379 செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலத்தும் அவ்வந் நிலத்தார் தம் குறிப்பின் வழங்குவன திசைச் சொல்லாம் என்ற உரையாசிரியர் கருத்தை மேலும் விரிவுபடுத்தும் நிலையில் அப் பன்னிருநாடுகளுடன் அவற்றைச் சூழ்ந்துள்ள பதினெண் தேயங்களுள் தமிழல்லாத ஏனைய பதினேழ் மொழிகள் வழங்கும் பதினேழ் நாடுகளிலும் வாழ்வோர்தம் குறிப்பினவாய்ச் செந் தமிழ் நிலத்து வந்து வழங்குவன திசைச்சொற்களாம் என்பார், 272. செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினுந் தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப. எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். ‘செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலத்தினும், பதினெண் தேயங்களுள் தமிழல்லாத ஏனைய மொழிகள் வழங்கும் பதினேழ் நிலத்தினும் வாழ்வார் தம் குறிப்பின வாய் (த் தமிழகத்தில் வந்து) வழங்குவனவற்றைத் திசைச்சொல் என்று கூறுவர் ஆசிரிதர்?’ என்பது இதன் பொருளாகும். செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலமாவன: ు. - 'தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி அருவா அதன் வடக்கு-நன்ருய சீத மலாடு புனளுடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்: 2 எனவகம் பழம்பாடலிற் கூறப்பட்டன. தமிழொழி பதினேழ் நிலமாவன:

  • சிங்களஞ் ச்ோன கஞ் சாவகஞ் சீனந் துளுக் குடகம் கொங்கணங் . i னடங் கொல்லந் தெலிங்கம் கலிங்கம் வங்கம் கங்க மகதங் க. ரங் கவுடங் கடுங்குசலந் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே?

என்பன. அருமணம் காம்போசம் ஈழம் கூவிளம் பல்லவம் அங்கம் என்பன முதலானவை இவற்றின் பரியாயமும் இவற்றின்