பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

381 வருவன தமிழொலிக்கு ஏலாமையின் வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்தசொல் வடசொல். என்ருர் ஆசிரியர், எழுத்தொடு புணர்தலாவது, தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்தினுல் இயன்று வழங்குதல். அவை, வாரி, மேரு, குங்குமம், வீரம், காரணம், காரியம், நிமித்தம் என்ருற் போலச் சான்ருேர் செய்யுட்கண் வருவன. வடசொல் என்பது ஆரியச்சொற் போலுஞ் சொல் என்பர் இளம்பூரணர். வடவெழுத்தானமைந்த ஆரியச் சொற்களும் பொதுவெழுத்தானமைத்த தமிழ்திரி சொற்களுமாக வடநாட்டில் வழங்கிய இருவகைச் சொற்களையுமே தொல்காப்பியர் வட சொல் எனத் தழுவிக் கொண்டார் என்பது இளம்பூரணர் கருத்தாகும். சளஉ. சிதைந்தன வரினு மியைந்தன வரையார். இதுவும் அது. (இ.ஸ்) பொதுவெழுத்தான் இயன்றனவேயன்றி வட மொழிச் சிறப்பெழுத்தாலாகிய சொற்களும் தமிழொலிக்கு இயைந்தனவாகச் சிதைந்துவரின் அவற்றையும் நீக்காது ஏற்றுக்கொள்வர் ஆசிரியர். எ-று. "இயைந்தன வரையார்? எனவே தமிழொலிக்கு இயை யாதன நீக்கப்படும் என்பதாம் . (உ-ம்) அரமிய வியலகத்தியம்பும், தசநான்கெய்திய பணைமருள் நோன்ருள் , வாதிகையன்ன கவைக்கதிர், 'கடுந்தேரிராமன் உடன்புணர் சீதையை வலித்தைகை யரக்கன் என்ருற்போல்வன சான்றேர் செய்யுட்கட் சிதைந்து வந்தன. சிதைந்தன வரினும் எனப் பொதுப்படக் கூறியவதஞல் ஆணே வட்டம் நட்டம் கண்ணன் எனப் பாகதமாகக் சிதைந் தனவும் கொள்ளப்படும். இவ்விரு சூத்திரப் பொருளேயும் தழுவி வடசொற்கு இலக் கனங் கூறுவது,