பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385 (இ~ள்) அந் நால்வகைப் பொருள்கோளுள் நிரல் நிறை யாவது வினையாலும் பெயராலும் ஆராயத் தோன்றி முடிக்கப் படும் சொல் வேறு நிற்ப, முடிக்குஞ் சொல்லாகிய பொருள் வேறு நிற்றலாம். எ.று.

  • வினயினும் பெயரினும் என்ற தல்ை வினைச்சொல்லால் வரும் வினே நிரனிறையும் பெயர்ச் சொல்லால் வரும் பெயர் நிரல் நிறையும் அவ்விரு சொல்லால்வரும் பொது நிரனிறையும் என

நிரனிறை மூன்ரும். (உ-ம்) மாசு போகவுங் காய்பசி நீங்கவும் கடிபுனல் மூழ்கி அடிசில்கை தொட்டு?? என முடிவனவும் முடிப்பனவுமாகிய வினைச்சொல் வேறு வேறு நிரலே நிற்றலின் வினை நிரனிறையாயிற்று. இது, மாசு போகப் புனல் மூழ்கிப் பசி நீங்க அடிசில் கை தொட்டு என இயையும். கொடி குவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி: என முடிவனவும் முடிப்பனவுமாகிய பெயர்ச்சொல் வேறுவேறு நிரலே நிற்றலின் பெயர் நிரனின்றையாயிற்று. இது கொடி நுசுப்பு, குவளேயுண்கண், கொட்டைமேனி என இயையும். 'உடலும் உடைந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடல் இருள் ஆம்பல் பாம்பென்ற-கெடலருஞ்சீர்த் திங்கள் திருமுகமாச் செத்து?? என முடிப்பனவாகிய வினையும் முடிவனவாகிய பெயரும் வேறு வேறு நிரலே நிற்றலின் பொது நிரனிறையாயிற்று. இது, திருமுகம் திங்களாக்கருதி, கடலும் உடலும், இருளும் உடைந் தோடும், ஆம்பலும் ஊழ்மலரும், பாம்பும் பார்க்கும் என இயையும். 'நினையத்தோன்றி என்ற தல்ை முடிவனவாகிய சொல்லும் முடிப்பனவாகிய பொருளும் நேர்முறையில் நிரல்பட நில்லாது, எதிர்முறையில் மயங்கிவருதலுங் கொள்வர்.