பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 (இ-ள்) பொருள் ஆராயுங்கால், அடி மறிச் செய்யுட் கண் ஈற்றடியது இறுதிச்சீர் ஈற்றயற்சீர்வயின் சென்று திரிந்து நிற்றலும் நீக்கார் ஆசிரியர். எ-று. மேற் சூத்திரத்தில் சீர்நிலை திரியாது தடுமாறும் என்ருர், ஈண்டு ஒரோவழிச் சீர்நிலை திரிதலும் உண்டு எனத் தழுவினர். எருத்து-ஈற்றின் அயல்; ஈண்டு ஈற்றயற் சீரைக்குறித்தது. ஈற்றடி என அடியைக் குறித்த ஆசிரியர் எருத்தடி, என்னது எருத்து’ எனப் பொதுப்படக் குறித்தலின் எருத்து என்பது ஈற்றடியின் எருத்தாகிய ஈற்றயற்சிரைக் குறித்ததெனக் கொண்டார் இளம்பூரணர். (உ-ம்) சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ராரணங் கினரே சார டை நீவரு தீயே வார லெனினே யானஞ் சுவலே: என்புழி அஞ்சுவல்’ என்னும் இறுதிச்சீர் யான்’ என்னும் ஈற்றயற் சீராய எருத்து வயிற் சென்று, அஞ்சுவல்யானே? எனத்திரிந்து நின்றவாறு கண்டு கொள்க. இதன்கண் எருத்து’ என்பதற்கு எருத்தடி எனப்பொருள் கொண்ட சே ைவரையர், தாம் கூறுமாறு ஈற்றடியிறுதிச்சீர் எருத் தடியிற் சென்று திரிதற்கு இலக்கியங்காணுது இலக்கியம் வந்த வழிக்கண்டு கொள்க’ என உதாரணங்காட்டாது சென்றமை யைக் கூர்ந்து நோக்குங்கால் இச்சூத்திரத்திற்கு இளம் பூரனர் கூறிய பொருளே தொல்காப்பியர்ை கருத்துக்கு ஏற்புடைய தென்பது உய்த்துணரப்படும். அடிமறிச் செய்யுளில் எல்லாவடியும் யாண்டும் செல்லுமா யினும் உரைப்போர் குறிப்பின் வழி அச்செய்யுளின் ஈற்றடியாக் குறிக்கத்தகும் அடியுண்மையால் ஈற்றடி எனக் குறித்தார் ஆசிரியர்,

உரைப்போர் குறிப்பின் உணர்வகையன்றி இடைப்பால் முதலீ றென்றிவை தம்முள் மதிக்கப் படாதன மண்டில யாப்பே .

என்ருர் பிறரும்.