பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

391 'ஆலத்து மேல குவளை குளத்துள வாலி னெடிய குரங்கு?? என்றவழி, குரங்கு ஆலத்து மேல’ எனப் பிறவடிக்கண் மொழி மாறி நின்றது? ? எனவும் இச் சூத்திரப் பொருளே விளக்குவர் தெய்வச்சிலையார். மொழிமாற்றுச் சூத்திரத்திற்கு இளம்பூரணர் கூறிய உரையினை யும் எடுத்துக்காட்டினேயும் சேனவரையர் கூறிய உரையினையும் எடுத்துக்காட்டினையும் கூர்ந்துணர்ந்த பவணந்தி முனிவர், மொழி மாற்றினை ஒரடிக் கண்ணே வருவதும் ஒன்றுக்குமேற் பட்ட பல வடிக்கண்ணே வருவதும் என இரண்டாகப் பகுத்து, ஒரடிக்கண் வருவதனை மொழிமாற்று' எனவும், பலவடிக்கண் வருவதனைக் கொண்டு கூட்டு’ எனவும் இருவகைப் பொருள் கோள்களாகக் கொண்டார். அவ்விரண்டனுள் மொழிமாற்றின் இலக்கணம் உணர்த்துவது, 412. ஏற்ற பொருளுக் கியையு மொழிகளே மாற்றியோ ரடியுள் வழங்கல் மொழிமாற்றே. எனவரும் நன்னுற் சூத்திரமாகும்.

  • கருதிய பொருளுக்குப் பொருந்திய மொழிகளே ஒரடி யுள்ளே மாற்றிச் சொல்வது மொழிமாற்ருகும்?’ என்பது இதன் பொருள்.

இளம்பூரணர் முதலியோர் சுண்ணமொழிமாற்றுக்குக் காட்டிய சரையாழ அம்மி மிதப்ப’ என்ற பாடலேயே மொழி மாற்றுப் பொருள் கோளுக்கு உதாரணமாகக் காட்டுவர் மயிலே நாதரும் சிவஞான முனிவரும். தொல்காப்பியர் சுண்ணமொழி மாற்று எனக் கூறிய பொருள்கோள், மொழி மாற்று என்பதிலேயே அடங்கும் என்பது அன்னேர் கருத்தெனத் தெரிகிறது. இனி, பலவடிக்கண்வரும் மொழிமாற்ருகிய கொண்டு கூட்டுப் பொருள் கோளின் இலக்கணம் உணர்த்துவது, 25