பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 417. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளே ஏற்புழி யிசைப்பது கொண்டு கூட்டே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். செய்யுளது பல அடிகளுள்ளும் கோத்துக் கிடந்த மொழி களைப் பொருள் ஏற்குமிடத்தே பிரித்து இசைத்துப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாம்?? என்பது இதன் பொருள். (உ-ம்.) ஆலத்து மேல குவளே குளத்துள வாலி னெடிய குரங்கு’’ இஃது, ஆலத்து மேல குரங்கு, குளத்துளகுவளை என சரடியுட் பெயரையும் வினையையும் வேண்டுழிக் கொண்டு கூட்டிக் கொண்டமையான் ஈரடிக் கொண்டு கூட்டு. தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்ருர் வரின்: இஃது அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் எனவும், தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட வெண்கோழி முட்டையுடைத் தன்ன பச8ல எனவும் பலவடியிற் சொற்களையுங் கூட்டிக் கொண்டமை யால் பலவடிக் கொண்டு கூட்டு’ என்பர் மயிலைநாதர். இனி, யாற்றுநீர்ப் பொருள்கோளின் இலக்கணம் உணர்த்து வது , 411 மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொருள் அற்றற் முெழுகுமஃ தியாற்றுப் புனலே. எனவரும் நன்னூற் குத்திரமாகும். ஏஜன அடிகளே நோக்காது அடிதோறும் பொருள் அமைந்து ஒழுகுவது யாற்றுநீர்ப் பொருள் கோளாம்’ என்பது இதன் பொருள் .