பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 தாய்க் கதவுதிறந்திடுமின்’ என இயைந்து நிற்றல் காண்க. வில்லின் இருதலேயும் நாண்பூட்டப்பட்டு இயைந்தாற் போன்று செய்யுளின் முதற் சொல்லும் இறுதிச் சொல்லும் தம்முள் இயைந்து பொருள்கொள்ள நிற்றலின் இப்பொருள் கோள் பூட்டுவிற் பொருள்கோள்’ எனப் பெயர் பெற்றது. தாப்பிசைப் பொருள்கோளுக்கு இலக்கணங்கூறுவது, 415. இடை நிலே மொழியே யேனேயீரிடத்தும் நடந்து பொருளே நண்ணுதல் தாப்பிசை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். செய்யுளின் இடையில் நின்றசொல் முதலினும் ஈற்றினும் சென்று பொருள் கொள்வது தாப்பிசைப் பொருள் கோள ம்: 2 என்பது இதன் பொருள். தாம்பு-கயிறு, ஈண்டுக் கயிருகிய ஊசல் என்னும் பொரு ளில் வந்தது. (உ-ம்). உண்ணுமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண அண்ணுத்தல் செய்யாதளறு? எனவரும். இதனுள் ஊன் என இடைநின்ற சொல் ஊசல் போன்று ஊன் உண்ணுமை, ஊன் உண்ண என முதலினும் ஈற்றினும் சென்று பொருள் கொண்டவாறு காண்க. அளேமறிபாப்புப் பொருள்கோளாவது இதுவென உணர்த்து ഖ ി 9 416. செய்யு ளிறுதி மொழியிடை முதலினும் எய்திய பொருள் கோள் அளேமறி பாப்பே. என வரும் நன்னூற் சூத்திரமாகும். செய்யுளின் இறுதியில் நின்ற சொல் இடையிலும் முதலி லும் சென்று பொருள் கொள்வது அளேமறிபாப்புப் பொருள் கோளாம். என்பது இதன் பொருள் . அளே-புற்று. பாப்பு-பாம்பு. புற்றிடத்தே சுற்றிக்கிடக்கும் பாம்பின் வால் உடலொடும் தலேயொடும் இயைந்து காணப்