பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 கிளே துதற் பெயராவன உறவுப்பொருளுணர்த்தி வரும் தமன், தமள், தமர்; நமன், நமள் நமர்; நுமன், நுமள், நுமர்; எமன், எமள், எமர்; தம்மான், தம்மாள், தம்மார்; நம்மான், நம்மாள், நம்மார்; நும்மான், நும்மாள், நும்மார்; எம்மான், எம்மாள், எம்மார் எனவரும். வெற்பன், பொருப்பன் எனவரும் ஒட்டுப் பெயர்கள் வெற்பு-அன், பொருப்பு + அன் எனப் பிரிக்குமிடத்து முதனிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்துநின்று தம்பொரு ளுணர்த்துமாறு போன்று கிளேநுதற் பெயராகிய இவை, தம் + அன், எம்+அன் எனப் பிரிப்புழிப் பொருள் உணர்த்தா மையால் பிரிப்பப் பிரியா? என்ருர், சகக. இசைநிறை யசைநிலே பொருளொடு புணர்தலென் றவைமூன் றென்ப வொருசொல் லடுக்கே. இஃது ஒரு சொல்லடுக்காவன இத்துணைய என்கின்றது . (இ-ள்) இசை நிறையும் அசைநிலேயும் பொருள் வேறுபாட் டொடு புணர்வதும் என ஒரு சொல்லடுக்கு அம்மூன்று வகைப் படும். எ-று. (உ-ம்.) ஏ. ஏ. ஏ. ஏ. பம்பல் மொழிந்தனள் என்பது இசை நிறை. மற்ருே மற்ருே; அன்றே அன்றே என்பன அசைநிலை , அவன் அவன்; வைதேன் வைதேன்; உண்டு உண்டு; போம் போம் என்பன முறையே விரைவும் துணிவும் உடன் பாடும் ஒரு தொழில் டலகால்நிகழ்தலும் ஆகிய பொருள் வேறு பாடுணர்த்தலின் பொருளொடு புணர்தலாம். அடுக்கு என்பது ஒரு சொல்லினது விகாரம் எனப்படும். அதனை இரண்டு சொல்லாகக் கொள்ளின் அஃது இரு பொருளு ணர்த்துதல் வேண்டும். அவ்வாறுணர்த்தாமையின் அதனே ஒரு சொல்லெனவே கொள்ளுதல் வேண்டும். சகஉ. வேற்றுமைத் தொகையே யுவமத் தொகையே வினேயின் ருெகையே பண்பின் ருெகையே உம்மைத் தொகையே யன் மொழித் தொகை யென் றவ்வா றென்ப தொகைமொழி நிலையே.