பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 காலத்தியலும் என்றது, எக்காலுங் காலமுடையவாய் இயலும் என்றவாறு காலம் எனப் பொது வகையாற் கூறியவத ல்ை மூன்று காலமுங் கொள்ளப்படும். தொகுதி காலத்தியலும்? எனவே விரிந்துநின்ற வழிப்போன்று தொக்கவழியும் தொகை யாற்றலாற் காலந்தோன்றும் என்றவாரும் ஈண்டு வினையென் றது, வினேச்சொற்கும் வினேப்பெயர்க்கும் முதனிலேயாய், உண் தின் செல் கொல் என வினேமாத்திரம் உணர்த்தி நிற்பனவற்றை . (உ-ம்) ஆடரங்கு; செய்குன்று; புணர்பொழுது அரிவாள்; பொருகளிறு; செல்செலவு எனவரும். காலமுணர்த்தாது வினமாத்திர முணர்த்தும் வினைப்பகுதி யாகிய இப்பெயர்கள், நிலமுதலாகிய பெயரொடு தொக்குழிப் பெயரெச்சப் பொருளவாய் நின்று காலம் உணர்த்தும் என்பர் சேவைரையர் . செய்யும் செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சங்களுள் காலமுணர்த்தும் இடைநிலேயும் பெயரெச்ச விகுதியுமாகிய இடைச்சொற்கள் மறைந்து நிற்க வினேப்பகுதி கள் மட்டும் நிலமுதலாகிய அறுவகைப் பெயரொடு ஒட்டி நிற்கும் தொகைச்சொல் வினைத்தொகையாம் என்பது, செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின் மெய்யொருங் கியலுந் தொழில்தொகு மொழியும்?? (தொல்-எழுத்து-482) எனத் தொல்காப்பியர் கூறுதலால், பெயரெச்சம் நின்று தொக்கதே வினைத்தொகை என்பது ஆசிரியர் கருத்தாதல் இனிது புலம்ை. இக்கருத்தினை அடியொற்றியதே, 363. காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை. என வரும் நன்னூற் சூத்திரமாகும். காலங்கள் தோன்ருது தன் எச்சமான பெயர் கொண்டு நிற்கும் பெயரெச்சம் வினேத்தொகையாம்?? என்பது இதன் பொருள். இங்குக் காலம் என்றது, முக்காலத்தையும் தோற்றுவது கும் இடைநிலைகளே. பொருகளிறு என்னும் 3&ణాక్ష్యశ ,