பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

403 விரிவுழி, பொருதகளிறு, பொரா நின்ற களிறு, பொருங் களிறு என விரியும். பிறவும் அன்ன. சகசு. வண்ணத்தின் வடிவின் அளவிற் சுவையினென் றன்ன பிறவும் அதன் குண நுதலி இன்ன திதுவென வரூஉ மியற்கை என்ன கிளவியும் பண்பின் ருெகையே. இது, பண்புத்தொகை யாமாறு கூறுகின்றது. ( இ-ள்) வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பவற்றி னும் அத்தன்மைய பிறவற்றினும் ஆகி, ஒரு பொருளினது குணத்தைக் கருதி இத்தன்மையது. இப்பொருள் என ஒன்றை ஒன்று விசேடித்து வரும் இயல்பினையுடைய எவ்வகைத் தொடர் மொழியும் பண்புத்தொகையாம். எ-று. (உ-ம்). கருங்குதிரை என்பது வண்ணப் பண்பு. வட்டப்பலகை என்பது வடிவப் பண்பு. நெடுங்கோல் என்பது அளவு. திங்கரும்பு என்பது சுவை. இவை விரியுங்கால், கரிதாகியது குதிரை, வட்டமாகியது பலகை, நெடியது கோல், தீவியது கரும்பு என விரியும். இத்தொகைமொழிக்கனுள்ள இருசொல்லும் ஒருபொருளவாய் இன்னது இது என ஒன்றையொன்று பொதுமை நீக்கிய வாறு காண்க. உய்ர்திணை அஃறிணை என்னும் அவ்விருதினேக் கண்ணும் உள்வாகிய ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐந்து பாலிஆனயும் அறிதற்குக் காரணமாகிய பண்புகொள் பெயரொடு தொகும் தொகைச் சொல் பண்புத்தொகையாம் என்பதனை, உயர்திணே யஃறிணை யாயிரு மருங்கின் ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும்?? (தொல்-குற்றியலுகரம்-77) என எழுத்ததிகாரத்தில் ஆசிரியர் விளங்கக் கூறியுள்ளார். பண்புத்தொகையிற் பண்புகொள் பெயரின் ஈற்றிலுள்ளி ஆம் பாலிறுகள் தொக்கு நின்றே விரியும் என்பது உணர்த்துதற்கு