பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

405 உரியனவாய் இருபெயர்கள் ஒட்டி நிற்பனவும் பண்புத்தொகை யாம்?? என்பது இதன் பொருள் . குணம்-பண்பு. குணத்தொகை-பண்புத்தொகை. குணத் தொகையென்றமையான் ஒரு பொருட்கு இருபெயர் வந்தன வற்றின் கண்ணும் பண்புருபு தொகும் என்பது பெற்ரும். செந்தாமரை என்பது, செம்மையாகிய தாமரை என விரியும். இது, செம்மை என்னும் குணப்பெயரும் தாமரை யென்னும் குனிப்பெயரும் ஒட்டி நின்ற பண்புத்தொகையாகும். ‘ஆயன் சாத்தன் , வேழக்கரும்பு என்பன பொதுவும் சிறப்பு மாய் ஆகிய என்னும் பண்புருபு இடையில் மறைந்து நிற்க ஒரு பொருட்கு இருபெயராய் ஒட்டி நிற்பன இருபெயரொட்டுப் பண்புத்தொகை யெனப்படும். சகஎ. இருபெயர் பலபெயர் அளவின் பெயரே எண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி எண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே. இஃது உம்மைத் தொகையாமாறு கூறுகின்றது. (இ-ள்) இருபெயர், பலபெயர், அளவுப்பெயர், எண்ணியற் பெயர், நிறைப்பெயர், எண்ணுப்பெயர் என அறுவகைப்பட்ட சொல்லேயும் கருதி எண்ணும் நிலேயினது (எண்ணிடைச் சொல் லாகிய உம்மை தொக்கு நின்ற) உம்மைத் தொகையாம். 6T-gy. எண்ணின் கண்வரும் இடைச்சொற்கள் பலவேனும் தொக்கு நிற்கும் ஆற்றலுடையது உம்மைப்பெயராகலான் உம்மைத்தொகையாயிற்று? என்பர் சேனுவரையர். வேற்று மைத் தொகை முதலாயின பலசொல்லா ற் ருெகுதல் சிறு பான்மை; அதனால் உம்மைத்தொகை இருசொல்லாலும் பல சொல்லாலும் தொகும் என்பதற்கு இருபெயர் பலபெயர்? என்ருர் . (உ-ம்) இருபெயர்:- உவாப் பதின்ைகு; உவாவும் பதினன்கும் என விரியும்.