பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

409 புறமொழி மேல் நிற்றலும் எனத் தொகைச் சொற்களின் பொருள் நிற்கும் மரபு அந்நான்காம் என்று கூறுவர் ஆசிரியர். எ-று. ஈண்டுப் பொருள்நில என்றது, வினைகொண்டு முடியுமாற் ருல் அச்சொல்லின் பொருள் மேற்பட்டுத் தோன்றுதலாகும். (உ-ம்) வேங்கைப்பூ என்புழி முன்மொழிக்கண் பொருள் சிறந்து நின்றது. அது நறிது’ என்னும் வினையோடு இயையு மாற்ருல் மேற்பட்டுத் தோன்றியவாறு காண்க. இஃது இட வகையான் முன்மொழியாயிற்று. அடைகடல் என்புழி அடை யென்னும் பின்மொழிக்கண் பொருள் நின்றது. கடலுங் கடலடைந்த இடமும் கடலெனப்படுதலின், அடை கடல் என்பது அடையாகிய கடல் என இரு பெயர்ப் பண்புத்தொகை . . 'உவாப்பதினன்கு’ என்புழி இருமொழிக் கண்ணும் பொருள் சிறந்து நின்றது. வெள்ளாடை என்புழித் தொக்க இருமொழி மேலும் நில்லாது உடுத்தாள்’ என்னும் அன்மொழிமேல் நின்றது. வேற்றுமைத் தொகை முதல் நான்கு தொகையும் முன் மொழிப் பொருள; வேற்றுமைத்தொகையும் பண்புத்தொகையும் சிறுபான்மை பின் மொழிப் பொருளவும் ஆம் உம்மைத் தொகை இருமொழிப் பொருட்டு என்பர் சேனவரையர். இச் சூத்திரப் பொருளேச் சுருங்க விளக்குவது, 369. முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி என நான் கிடத்துஞ் சிறக்குந் தொகைப்பொருள். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். தொகை நிலத் தொடர் மொழிகளின் முன்மொழியிலும் பின்மொழியிலும் அனைத்து மொழியாகிய பன்மொழிகளிலும் அவையல்லாத புறமொழியிலும் என இந்நான்கிடங்களிலும் தொகைநிலத் தொடர்ப்பொருள் சிறந்து நிற்கும் என்பது இதன் பொருள் . உதாரண முன்னர்க்காட்டியனவே.