பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 i ஒழிய விரண்டு முதலாத் தொடர்ந்தொரு மொழிபோல் நடப்பன தொகை நிலத் தொடர் மொழி. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பெயர்ச் சொல்லோடு பெயர்ச் சொல்லும், பெயர்ச்சொல். லோடு வினைச்சொல்லும், வேற்றுமை வினை பண்பு என்பன முதலாக வகுத்துக் கூறப்படும் அறுவகைப் பொருட் புணர்ச்சிக் கண், அவற்றின் உருபுகள் இடையே மறைந்து நிற்ப, இரண்டு முதலிய பல சொற்கள் தொடர்ந்து ஒரு மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்மொழிகளாம்?? என்பது இதன் பொருள். - வினேயொடு வினே தொகைநிலைத் தொடர் ஆகாமையின் அதனை ஒழித்தும், நிலத்தைக் கடந்தான் என உருபுவிரியின் பிளவுபட்டு வேருகப் பிரிந்தும், நிலங்கடந்தான் என உருபு தொக்கதேல் பிளவுபடாது ஒரு சொல்லாகியும் தொடருமாதலின் , 'இரண்டு முதலாத் தொடர்ந்து ஒருமொழிபோல் நடப் பன வென்றும் கூறினர். ஒரு மொழிபோல் நடப்பன தொகை நிலைத் தொடர்மொழி என்னும் நன்னூற் சூத்திரத்தொடர், ‘எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய’ என்னுந் தொல் காப்பியச் சூத்திரத்தை அவ்வாறே சொற்பொருள் திறத்தால் ஒத்தமைந்திருத்தல் உளங்கொளத்தகுவதாகும். ச.உக, உயர்தினே மருங்கின் உம்மைத் தொகையே பலர் சொல் னடைத்தென மொழிமனர் புலவர். இஃது உயர்தினை உம்மைத்தொகைக்கு எய்தாதது எய்து விக்கின்றது. (இ-ள்) உயர்திணைப் பெயரிடத்துத் தொக்க உம்மைத் தொகை பலர்பால் ஈற்றினதாய்ப் பன்மையுணர்த்தி நிற்கும் என்பர் ஆசிரியர். எ-று . (உ.ம்) மாமூல பெருந்தலைச் சாத்தர்; கபில பரண நக்கீரர் எனவரும்.