பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 'பலர்சொல் நடைத்து? என்றது, எண்ணப்பட்டார் பலர் மேலும் வினையேற்கும் வண்ணம் தமக்குரிய ஒருமைப்பாலீறு கெட்டுப் பலர்பாற்குரிய ஈற்றினதாகத்திரிதலே. இச்சூத்திரப் பொருளேச் சுருங்க விளக்குவது, 371. உயர் திணை யும்மைத் தொகைபல ரீறே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ச.உ.உ. வாரா மரபின வரக்கூ றுதலும் என் ைமரபின வெனக்கூ றுதலும் அன்னவை யெல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன வென்னுங் குறிப்புரையாகும். இஃது உலகியலில் வழங்கும் ஒருசார் தொடர்மொழிகள் பற்றிய வழுவமைக்கின்றது. (இபள்) வாராத இயல்புடையவற்றை வருவனவாகச் சொல்லுதலும், என்று கூருத இயல்புடையவற்றைக் கூறுவன வாகச் சொல்லுதலும் அத்தன்மையன எல்லாம் அவ்வப்பொரு ளின் இயல்பால் இத்தன்மையன என்று சொல்லுங் குறிப்பு மொழிகளாம். எ-று. (உ-ம்) அவ்வழி இங்கு வந்து சேர்ந்தது?, அம்மலே வந்து இதனோடு பொருந்திற்று’ எனவும், அவல் அவல் என் கின்றன. நெல்’, மழை மழையென்கின்றன பயிர் எனவும் வரும் இவை, வருதலேயும் சொல்லுதலேயும் உணர்த்தாது இத்தன்மை யன என்பதனேக் குறிப்பால் உணர்த்தியவாறு காண்க . தொல்காப்பியனுர் குறித்த இம்மொழி வழக்கினே யடியொற் றிக் கேட்டல், கிளத்தல், இயங்கல், இயற்றுதல் என்னும் இத் தொழிற்றிறமில்லாத அஃறிணைப் பொருளே அத்தொழில் நிகழ்த்துவன போலக் கூறும் சொன்முறையினே எடுத் துரைப்பது, 408. கேட்குந போலவுங் கிளக்குந போலவும் இயங்குந போலவும் இயற்றுந போலவும் அஃறிணை மருங்கினும் அறையப் படுமே. எனவரும் நன்னூற் குத்திரமாகும்.