பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

413 கேளாதனவற்றைக் கேட்பன போலவும் சொல்லாதன வற்றைச் சொல்வன போலவும் நடவாதனவற்றை நடப்பன போலவும் செய்யாதனவற்றைச் செய்வன போலவும் அஃறிணை யிடத்துஞ் சொல்லப்படும்?? என்பது இதன் பொருள். (உ-ம்) நன்னீரை வாழி அனிச்சமே (திருக்-1111) எனவும், பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்கும்: (திருக்-709) எனவும், இவ்வரசன் ஆணே எங்குஞ் செல்லும்: எனவும், தன்னெஞ்சே தன்னேச்சுடும். (திருக்-293) எனவும் வரும் . 'அஃறிணை மருங்கினும் என்ற உம்மையான் உயர்திணை மருங்கினும் இவ்வாறு சொல்லப்படுதல் புலம்பல் முதலியவற் றுட்காண்க: என்பர் சிவஞானமுனிவர். சஉங். இசைபடு பொருளே நான்கு வரம் பாகும். சஉச. விரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும். இவற்ருல் முற்குறித்த அடுக்குச் சொற்களுக்கு வரையறை கூறுகின்ருர், (இ-ஸ்) முற்கூறிய ஒரு சொல்லடுக்கினுள் இசை நிறைத் தற்குவரும் அடுக்கு நான்காகிய வரம்பையுடையது. பொரு ளொடு புணர்தற்கண் விரைவு பொருள்படவரும் அடுக்கு மூன்ரு கிய வரம்பையுடையதாம். (உ.ம்) பாடுகோ பாடுகோ பா டுகோ பாடுகோ: என இசை நிறை நான்கடுக்கி வந்தது. தீத் தீத் தீ’ என விரைசொல் மூன்றடுக்கி வந்தது. அடுக்கு என்னும் பெயரே ஒருசொல் இருமுறையடுக்கி வருதலேக் குறிக்குமாதலின், இருமுறைக்கு மேலாக மூன்று. நான்கு முறை அடுக்கி வருவனவற்றிற்கு மட்டும் ஆசிரியர் இச் சூத்திரங்களால் வரையறை கூறினர். இச்ைபடுபொருளும் விரைசொல்லடுக்கும் நான்கும் மூன்றுமாய் அடுக்குமெனவே அசைநிலையடுக்கு இரண்டாய் வரும் என்பதுதானே பெறப்படும்.