பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

415 ச.உ.சு. கேட் டை யென்ரு நின்றை யென்ரு காத்தை யென்ரு கண்டை யென்ரு அன்றி யனைத்தும் முன்னிலை யல்வழி முன்னுறக் கிளந்த வியல்பா கும்மே. இதுவும் அது. (இ-ள்) கேட்டை எனவும் நின்றை எனவும் காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அந்நான்கும். முன்னிலேப் பொருளே உணர்த்தி நில்லாதவழி மேற்சொல்லப்பட்ட அசை நிலேயாம். எ-று. இவையும் கட்டுரைக்கண் அடுக்கியும் சிறுபான்மை அடுக் காதும் ஏற்றவழி அசைநிலையாய் வருமாறு வழக்கிற் கண்டு கொள்க. நின்றை, காத்தை என்பன இக்காலத்துப் பயின்று வாரா என்பர் சேவைரையர். முன்னர்க் கூறப்பட்ட கண்டீரே? முதலியன வினவிற்கு அடையாக அடுக்கி வந்தவழி முன்னிலே யசைநிலேயேயாமன்றி வினைச்சொல்லா தலில்லை. இச்சூத்திரத் திற் கூறப்பட்ட கண்டை முதலியன அடுக்கியும் அடுக்காதும் முன்னிலைச் சொல்லாகவும் அசைநிலேயாகவும் வருவன ஆதலின் அந்நிலைமை நீக்குதற்கு முன்னிலேயல்வழி என்ருர் ஆசிரியர். இவ்விரு சூத்திரத்தானுங் கூறப்பட்டன. வினைச்சொல்லாத லும் இடைச் சொல்லாதலும் உடைமையான் வினையியலுள்ளும் இடையியலுள்ளுங் கூருது ஈண்டுக் கூறினர். ச.உ.எ. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றச் சிறப்புடை மரபி னம்முக் காலமும் தன்ம்ை முன்னிலே படர்க்கை யென்னும் அம்மூ விடத்தான் வினேயினுங் குறிப்பினு மெய்ம்மை யானு மிவ்விரண் டாகும் அவ்வா றென்ப முற்றியன் மொழியே. இது முற்றுச் சொற்களின் இலக்கணமும் அவற்றின் பாகுபாடும் உணர்த்துகின்றது. (இ-ள்) இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்னும் சிறப்புடைய இயல்பினவாகிய அம் மூன்றுகாலமும் உடையவாய்த்