416 தன்மை முன்னிலே படர்க்கையென்னும் அம்மூவிடத்தும் உயர் திணையும் அஃறிணையும் இருதினைப் பொதுவுமாகிய பொருள் தோறும் வினையும் வினேக்குறிப்பும் என இவ்விரண்டாய் வரும் அவ் வறுகற்றுச்சொற்களையும் முற்றுச்சொல் என்று கூறுப ஆசிரியர் எ-று. மூவிடத்தும் வினையும் குறிப்பும் பற்றி இவ்விரண்டாய் வருதலின் அறுவகைச் சொல்லாயின. (உ-ம்) உண்டேன், கரியேன் எனவும், உண்டாய் கரியை எனவும், உண்டான், கரியன் எனவும் வினைச்சொற் கள் மூவிடத்தும் வினையும், வினேக்குறிப்புமென இவ்விரண் டாய், ஆருய்வந்தன. இடமும் திணையும் பாலும் விளக்குதல் ஒருசார் வினைச் சொற்கே யுரியவாதல் போலாது காலமுணர்த்துதல் எல்லா முற்றுச்சொற்கும் முன்னர்ச் சிறத்தலின் சிறப்புடை மரபின் அம்முக்காலமும் என்ருர் . வினையினும் குறிப்பினும் இவ்விரண் டாய் வருதலாவது, தெரிநிலே வினையால் தெளிவாகக் காலந் தோற்றுதலும் குறிப்புவினையால் அவ்வாறு காலந் தெளியத் தோன்ருமையும் ஆகிய இருதிறத்தவாய் வருதல். மெய்ம்மை யானும்-பொருள் தோறும்; உயர்திணை, அஃறிணை, விரவுத் திணை என்னும் மூவகைப் பொருள் தோறும். ஆனுருபு தொறுப் பொருளில் வந்தது. முற்றி நிற்றல் முற்றுச்சொற்கு இலக்கண மாதல் முற்றியன் மொழியே என்பதனுற் புலளும். பாலும் காலமும் செயப்படு பொருளும் தோன்றி முற்றி நிற்றலானும், பிறிதோர் சொல் நோக்காது முடிந்து நிற்றலானும், எப்பொழுது அவைதம் எச்சம்பெற்று நின்றனவோ அப்பொழுதே பின்யாதும் வேண்டாது செப்பினே மூடினுற்போன்று பொருள் முற்றி நிற்ற லானும் முற்ருயின எனப் பெயர்க் காரணங் கூறுவர் உரை யாசிரியர். உயர்திணை, அஃறிணை, விரவுத்திணே என்னும் பொருண் மேல் வினையும் வினைக்குறிப்புமாய் வருதல் பற்றி அவ்வா றென்ப? என்ருர் காலமும் இடமும் முதலாயினவற்றேடு கூட்டிப் பகுப்பப் பலவாம்.
பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/429
Appearance