பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தன்னின முடித்தல் என்பதல்ை எண்ணுங்காலும் பொன் னும் மணியும் முத்தும் பவளமும் என இனமொத்தனவே எண்ணப்படும் என்பர். வினவிடத்தும் எதிர்மொழி செப்புமிடத்தும் சினையும் முத லும் மயங்கப்பெரு என்பதனே, 386. வினவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல். என்னும் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார். பி.எ. தகுதியும் வழக்குந் தழி இயின வொழுகும் பகுதிக் கிளவி வரை நிலை யிலவே. இதுவும் வழி இயமையுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) தகுதி பற்றியும் வழக்குப் பற்றியும் பொருந்தி நடக்கும் இலக்கணத்திற் பக்கச் சொல் கடியப்படா. எ.று. தகுதியென்பது, இப்பொருளேயறிதற்கு அமைந்துகிடந்த இச் சொல்லாற் கூறுதல் தகுதியன்றென்று அச்சொல்லாற் கூருது வேறு தக்கதோர் வாய்பாட்டாற் கூறுவது. மங்கல மரபிற்ை கூறுதலும், இடக்கரடக்கிக் கூறுதலும், குழுவின் வந்தகுறி நிலே வழக்கும் எனத் தகுதி மூன்றுவகைப்படும். செத்தாரைத் துஞ்சினரென்றலும் சுடுகாட்டை நன்காடென்ற லும் மங்கல மரபினுற் கூறுதலாம். கால்கழி இவருதும் கண்கழி இ வருதும் என்ருற் போல்வன இடக்கரடக்கிக் கூறுதலாம். பொற்கொல்லர் பொன்னேப் பறி என்றலும் வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும் குழுவின் வந்த குறிநிலை வழக்காம் . வழக்கென்பது எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப்பொருளேக் குறித்து உலகவழக்கில் தன்னியல்பின் வழங்கு வது. இலக்கண வழக்கும் இலக்கணத்தொடு பொருந்தின மரூஉ வழக்கும் என வழக்காறு இருவகைப்படும் எனவும், இல்முன் என்பதனை முன்றில் என்று முன்பின்னகச் சொல் லுதல் இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ வழக்கு எனவும்,