பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.18 மேற்குறித்த இடம் காலம் ஆகிய வரையறையுட்படாது யார், எவன், இல்லை , வேறு என மூன்றிடத்தும் பொதுவாகி வரும் வினேச்சொல்லும், குறிப்புவினேக் கீருகாது தெரிநிலை வினே க்கீருவனவும் தெரிநிலை வினைக்கீருகாது குறிப்பு வினைக்கீரு வனவுமாய்ச் சிறப்பீற்றனவாய் முன் வினையியலில் எடுத்தோதப் பட்டனவும் அடங்க எவ்வயின் வினையும்? என்ருர், அவ்வியல் நிலையலாவது முற்கூறிய முற்ருந்தன்மையில் நிற்றல். இனி, இச்சூத்திரத்திற்கு எவ்விடத்து வினைமுதனிலே களும் முற்றுச் சொல்லாய் நிற்கும் என மற்ருெரு பொருள் வரைந்து எனவே அவை எச்சமாதல் ஒருதலையன்றென்பதாம் . ஆகவே வினைச்சொல்லாதற்குச் சிறந்தன முற்றுச் சொல்லே என்பதாம் எனவும், எல்லா வினையும் முற்றுச் சொல்லாகலும், கச்சினன் கழலின ன் நிலத்தன் புறத்தன் என்னுந் தொடக் கத்து வினைக்குறிப்பின் முதனிலே எச்சமாய் நில்லாமையும் வழக்குநோக்கிக் கண்டுகொள்க’ எனவும் இவையிரண்டும் இச்சூத்திரத்துக்குப் பொருளாகக் கொள்க’ எனவும் கூறுவர் சேணுவரையர். முற்றுச் சொல்லேயன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமும் காலமும் இடமும் உணர்த்துமென்பது இச்சூத்திரத்திற்குப் பொருளாகவுரைப்பர் இளம்பூரணர் . ஈண்டு அவ்வியல் நிலையும்: என்னும் சுட்டு முற்றினியல்பினேச் சுட்டி நிற்றலானும் முன்னும் பின்னும் முற்றுச்சொற்களின் இலக்கணங்கூறும் சூத்திரங்களி னிடையே அமைந்த இச்சூத்திரத்தில்வரும் வினையென்றது முற்று வினையா மன்றிப் பெயரெச்ச வினையெச்சங்களாகிய குறைச்சொல்லாதல் ஏலாமையானும் மூவிடத்திற்கும் பொது வாகிய அவை இடவேறுபாடு உணர்த்தாமையானும் அவ்வுரை ஆசிரியர் கருத்தொடு பொருந்துவதாகத் தோன்றவில்லே . ச.உக அ ைவதாந் தத்தங் கிளவி யடுக்குந வரினும் எத்திறத் தானும் பெயர் முடி பின வே. இது முற்றுச் சொற்கு முடிபு கூறுகின்றது.