பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419 (இ-ள்) மேற்குறித்த முற்றுச்சொற்கள்தாம் தத்தம் பாற் சொல்லாகிய முற்றுச்சொற்களாய்ப் பல அடுக்கிவரினும் (தம் முள் முடியாது) எவ்வாற்ருனும் பெயரொடு முடியும். எ-று. (உ-ம்) உண்டான் தின்ரு ன் ஓடின்ை பாடினன் சாத்தன் எனவும் நல்லன் அறிவு டையன் செவ்வியன் சான்ருேர்மகன் எனவும் வினையும் வினைக்குறிப்புமாகிய முற்றுச்சொற்கள் பல அடுக்கிவந்து பெயரொடு முடிந்தன. என்மனுர் புலவர் என வெளிப்பட்டும், முப்பஃதென்ப? என வெளிப்படாதும் பெயரொடு பெயர் முடிபாம் என்பார், “எத்திறத்தானும் பெயர் முடியினவே” என்ருர். இன்னும் எத்திறத்தானும் என்ற தளுன் உண்டான் சாத்தன்; சாத்தன் உண்டான் என முன்னும் பின்னும் பெயர் கிடத்தலும் கொள்ளப்படும். மேற்குறித்த முற்றுச்சொற்களின் இலக்கணங்களைத் தொகுத் துரைக்கும் முறையில் அமைந்தது, 322. பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்பெயர் முதலறு பெயரல தேற் பில முற்றே. என வரும் நன்னூற் சூத்திரமாகும். எல்லா வினைச்சொற்கும் பொதுவிலக்கணமாகிய செய்ப வன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினையுந் தோற்றுவித்துப் பொருட்பெயர் முத்லாகிய அறு வகைப் பெயரையும் பயனிலையாக ஏற்பனவாகிப் பெயரல்லது ஒன்றனையும் ஏலாதன முற்றுவினே, வீனைக்குறிப்புக்களாம்: என்பது இதன் பொருளாகும். ஐம்பாலவாகிய வினேமுதலைத்தரும் விகுதியுறுப்புக் குறைந்த குறைச் சொற்களாகிய எச்சங்களைப் போலன்றி, அவ்வுறுப்பொடு கூடி நிறைந்து நிற்றலின் முற்றெனப்படும் என்பார் பொதுவியல்பு ஆறையும் தோற்றி? என்ருர், பெயரன்றி வினேச்சொல் முதலியவற்றுள் ஒன்றனையும் ஏலாதனமுற்று எனவும், பெயர்ப்பின் வேறென்றனையும் ஏலா