பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 தன முற்று எனவும் இருபொருள் தோன்றப் பெயரலது ஏற்பில முற்றே? என்ருர் . பெயரலது ஏற்பில முற்றே? என்னும் இத்தொடர் எத் திறத்தானும் பெயர் முடியினவே” என்னுந் தொல்காப்பியத் தொடர்ப்பொருளைத் தெளிவுபடுத்தும் முறையில் அமைந்துள் ளமை காண்க . சங்ம். பிரிநிலை வினேயே பெயரே யொழியிசை யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே குறிப்பே யிசையே யாயி ரைந்து நெறிப்படத் தோன்று மெஞ்சபொருட் கிளவி. இஃது எச்சங்களாவன இவையெனத் தொகுத்துக் கூறுகின் நீது . (இ.ள்) பிரிநிலையெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம், என வென்னெச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் என்னும் இப்பத்தும் முறைமைப்படத் தோன்றும் எச்சங் களாம். எறு. எஞ்சுபொருட்கிளவி-எஞ்சி நிற்பதோர் பொருளையுடைய எச்சச்சொல். பெயர், வினே என்பன ஈண்டு அவற்ருல் முடியும் பெயரெச்சத்தினையும் வினேயெச்சத்தினேயும் சுட்டி நின்றன; ஆகுபெயர். ஆயிரைந்தும் எஞ்சுபொருட்கிளவி என்ருரேனும் எஞ்சுபொருட்கிளவி ஈரைந்து என்பது கருத்தாகக் கொள்க. பிரிக்கப்பட்ட பொருளே யுணர்த்துஞ்சொல் எஞ்ச நிற்பது பிரிநிஆலயெச்சம். வினேச்சொல் எஞ்ச நிற்பது வினையெச்சம். பெயர்ச்சொல் எஞ்ச நிற்பது பெயரெச்சம். சொல்லொழிந்த சொற்பொருண்மை எஞ்ச நிற்பது ஒழியிசையெச்சம். தன்னின் மாறுபட்ட பொருண்மை எஞ்ச நிற்பது எதிர்மறை எச்சம். உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வருஞ் சொற்ருெடர்ப் பொருளே எச்சமாகக் கொண்டு முடிய நிற்பது உம்மையெச்ச மாகும். எனவென்னும் ஈற்றையுடையதாய் வினேயெஞ்ச நிற் பது எனவென்னெச்சமாகும். இவை ஏழும் தமக்குமேல் வந்து