பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

421 முடிக்கும் எச்சச் சொற்களேயுடைய எச்சங்களாகும். சொல் லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம், என்னும் மூன்றும் ஒரு தொடர்க்கு ஒழிபாய் எஞ்சி நிற்பன. எனவே இவை பிற சொற்களே விரும்பி நில்லாது சொல்லுவார் குறிப்பால், சொல் லப்படாது எஞ்சி நின்ற பொருளே யுணர்த்துவனவாகும். ஒரு சொல்லளவு எஞ்சி நிற்பன சொல்லெச்சம் என்றும், தொட ராய் எஞ்சுவன இசையெச்சமென்றும், இங்ங்ணம் சொல்வகை யானன் றிச் சொல்லுவான் குறிப்பினுல் வேறுபொருள் எஞ்ச நிற்பன குறிப்பெச்சம் என்றும் கூறுவர். எச்சமாவன ஒருசார் பெயரும் வினேயும் இடைச்சொல்லு மாத்லின் பெயரியல் முதலிய இயல்களுள் இப்பத்தெச்சங் க்ளேயும் ஒருங்குணர்த்துதற்கு இடமின்மையால் எஞ்சி நின்ற இலக்கணங்கூறும் இவ்வெச்சவியலின்கண்ணே. இவற்றைத் தொகுத்துக் கூறினர் ஆசிரியர். இப்பத்தெச்சங்களேயும் கூற்றெச்சம் குறிப்பெச்சம் என இருவகையாகப் பகுத்து, அவற்றின் முடிபினேயும் உணர்த்து வதாக அமைந்தது, 859. பெயர்வினை யும்மை சொற் பிரிப்பென வொழியிசை எதிர்மறை யிசை யெனுஞ் சொல்லொழியென்பதும் குறிப்புந் தத்த மெச்சங் கொள்ளும், என வரும் நன்னூற் சூத்திரமாகும். 'பெயரெச்சமும் வினேயெச்சமும் உம்மையெச்சமும் சொல் லெச்சமும் பிரிநிலையெச்சமும் எனவெச்சமும் ஒழியிசையெச் சமும் எதிர்மறையெச்சமும் இசையெச்சமும் ஆகிய கூற்றெச் சம் ஒன்பதும் குறிப்பெச்சம் ஒன்றும் தத்தம் எச்சங்களைக் கொண்டு முடியும் என்பது இதன் பொருள். சொல்லொழிபு என்பதனைமுற்கூறிய ஒன்பதனுேடும் ஒழிபு என்பதனேக் குறிப்பிளுேடும் கூட்டுக. சொல்லொழிபு -கூற் றெச்சம். குறிப்பொழிவு-குறிப்பெச்சம். எனவே எச்சங்கள் கூற்றெச்சம் குறிப்பெச்சம் என இருவகைய என்பது உம் கூற் றெச்சங்களுள் ஒன்ருகிய சொல்லெச்சம் என்பது சொல் விகற்