பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 சங்சு. உம்மை யெச்ச மிருவீற்ருனுந் தன் வினே யொன்றிய முடிபா கும்மே. இஃது உம்மையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) உம்மையெச்சம் இரண்டு வேறுபாட்டின் கண்ணும் தன்வினையொடு பொருந்திய முடிபாகும். எ-று. இருவீருவன, எஞ்சுபொருட் கிளவியாய் வந்து முடிப்பதும், அதனுல் முடிவதும் ஆகிய உம்மையெச்ச வேறுபாடு இரண்டும். தன்வினையென்றது முடிவதும் முடிப்பதும் ஆகிய அவ்விரண்டு சொல்லின்கண்ணும் உடன்பாடாகியும் எதிர்மறையாகியும் வரும் ஒத்த வினைச்சொல்லினே. அச்சொல் உம்மைக்கேற்ற வினேச்சொல்லாதலின் தன்வினையாயிற்று. எனவே உம்மை யொடு தொடர்ந்த சொல்லிரண்டற்கும் வினேயொன்றேயாதல் வேண்டும் என எய்தாதது எய்துவித்தவாறு. (உ.ம்) சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான்: என இரண்டும் ஒருவினை கொண்டவாறு கண்டுகொள்க. சாத்தனும் வந்தான் கொற்றனும் உண்டான் என வினே வேறுபட்டவழி உம்மையெச்சமும் எஞ்ச ப்ொருட்கிளவியும் இயையாமை காண்க. வேங்கையும் ஒள்ளினர் விரிந்தன, நெடுவெண் திங்களும் ஊர்கொண்டன்றே: (அகம்-2) என்புழி இணர்விரிதலும் ஊர்கோடலும் ஆகிய வினேயிரண்டும் மனஞ்செய் காலம் இதுவென்றுணர்த்துதலாகிய ஒருபொருள் குறித்து நின்றமையான் அவை ஒரு வினேப்பாற்படும் என்பர் சேனுவரையர். எதிர்மறையும்மை எதிர்மறையெச்சமாயடங்கு தலின், ஈண்டு உம்மையெச்சம் என்றது எச்சவும்மையேயாம். முருடன. தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலே நிகழுங் காலமொடு வாராக் காலமும் இறந்த காலமொடு வாராக் காலமும் மயங்குதல் வரையார் முறை நிலேயான. இதுவும் அவ்வெச்சவும் மையது காலமயக்கங் கூறுகின்றது.