பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 எனவென்பதனோடு ஒத்தலான் அதனை எனவென்னெச்சத்தில் அடக்கினர் ஆசிரியர் எனக்கருதுவர் சேவைரையர். உ-ம். நன்றென்று கொண்டான்; தீதென்றிகழ்ந்தான் எனவரும். சங்க.ை எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு மெஞ்சு பொருட் கிளவி யிலவென மொழிப. இஃது ஏனையெச்சங்கட்கு முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்) முற்குறித்த பத்தெச்சங்களுள் கூறப்படாது எஞ்சி யுள்ள சொல்லெச்சம் குறிப்பெச்சம் இசையெச்சம் ஆகிய மூன்றும் மேல்வந்து தம்மை முடிக்கும் எஞ்சுபொருட்கிளவியை உடையன அல்ல என்று செர்ல்லுவர் ஆசிரியர். எ-று. என்றது, அவ்வத்தொடர்க்குத் தாம் எச்சமாய் வந்து அவற்றது அவாய் நிலேயை நீக்குதலின் முற்கூறிய பிரிநிலை யெச்சம் முதலாயின போலத் தம்மை முடித்தற்குப் பிற சொல்லே அவாவி நில்லா என்பதாம். சச0. அவைதாம் தத்தங் குறிப்பி னெச்சஞ் செப்பும். (இ.ள்) அவ்வெச்சம் மூன்றும் சொல்லுவார் குறிப்பினால் எஞ்சிநின்ற பொருளே யுணர்த்தும். எ-று. (உ-ம்) பசப்பித்துச் சென்ரு ருடையையோ வன்ன நிறத்தையே பீர மலர்2 என்புழி, பசப்பித்துச் சென்றரை யாமுடையேம் என வந்த தொடர்மொழி எச்சமாய் நின்ற குறிப்புப்பொருளே வெளிப் படுத்தலாற் குறிப்பெச்சமாயிற்று. அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு? என்றவழி நீத்தார்க்கே தவறு: என எஞ்சிய பொருளுணர்த்தலான் இசையெச்ச மாயிற்று. சொல்லெச்சத்திற்கு உதாரணம் அடுத்த சூத்தி ரத்திற் காட்டப்படும். ஒருசொல் அளவில் எஞ்சி நிற்பது