பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

427 சொல்லெச்சம் என அடுத்த சூத்திரத்திற் கூறப்படுதலின், இசை யெச்சம் என்பது தொடர்ச் சொல்லா யெஞ்சுவதென்பது பெறப்படும். சொல் என்னும் சொல் எஞ்சுவதே சொல் லெச்சம் என்போர், ஒருசொல் எஞ்சுதலும் தொடர்ச்சொல் எஞ்சுதலும் ஆகிய இருவகையினையும் இசையெச்சமென அடக்குவர். சசக. சொல்லெ னெச்சம் முன்னும் பின்னுஞ் சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே. இது சொல்லெச்சம் ஆமாறு இதுவென விளக்குகின்றது. (இ-ள்) சொல்லெச்சம் ஒரு சொற்கு முன்னும் பின்னும் சொன்மாத்திரம் எஞ்சுவதல்லது தொடர யெஞ்சுதலின்று. 5τ-gi , உயர்திணை என்மனர்' என்புழி ஆசிரியர் என்னும் சொல் முன்னரும், மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே என்புழி எமக்கு? எனப் பின்னரும் ஒருசொல் எஞ்சிநின்றவாறு கண்டுகொள்க. ஒரு சாரார் இவற்றை இசை யெச்சமென்று கொண்டு, சொல்லளவல்லது எஞ்சுதலின்றே : என்பதற்குச் சொல்? என்னும் சொல்லளவல்லது பிறிதுசொல் எஞ்சுதலின்று எனப் பெ ருளுரைத்து, பசித்தேன் பழஞ் சோறு தாவென்று நின்ருள் என்புழித் தாவெனச் சொல்லி யெனச் சொல்லென்னுஞ் சொல் எஞ்சி நின்றது என்பர். சசஉ. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். இது மரபு வழுக்காக்கின்றது. (இ-ள்) அவைக்கண் உரைக்கப்படாத சொல்லே அவ்வாய் பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் கூறுக. எ-று. அவைக்கண் வழங்கப்படுஞ் சொல்லே அவை: எனக் குறித்தார். (உ-ம்) 'ஆன்முன் வரூஉம் ஈகார பகரம்: எனவும் புலி நின்றிறந்த நீரல்லீரத்து’ எனவும் இடக்கர் வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் கூறியவாறு.