பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

435 சொல்லாம்; எனவே தாமாக நின்று பொருளுணர்த்துஞ் சொல்லாகா . எ-று. என்றது, இடைச்சொற்கள் எல்லாம் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் போலப் பொருளையும் தொழிலேயும் தாமாக நேரே உணர்த்தாது, ஐ ஒடு கு இன் அது கண் என்னும் வேற்றுமையுருபு போலச் சொற்பொருளே வேறுபடுத்துவன என்பதாம் . வேற்றுமை - வேறுபாடு. வேற்றுமைச்சொல் - வேற்று ைமயைச் செய்யுஞ்சொல். மன் என்னும் இடைச்சொல் கழிவினும் ஆக்கத்தினும் ஒழியிசையினும் வந்தவழித் தான் இடைநின்று நிலைமொழியின் பொருள் வேறுபாட்டினேக் குறித்து நின்றதல்லது, தானே அப்பொருளே உணர்த்தாமை கண்டு கொள்க. பிறிதோர் சொல்லே வேறுபடுப்பனவும் பிறிதோர் சொல் லான் வேறுபடுக்கப்படுவனவும் எனச் சொல் இருவகைப்படும். பிறிதோர் சொல்லே வேறுபடுத்தலாவது விசேடித்தல். பிறி தோர் சொல்லான் வேறுபடுக்கப் படுதலாவது விசேடிக்கப் படுதல். இடைச் சொல்லெல்லாம் பிறிதோர் சொல்லே வேறு படுக்குஞ் சொல்லாவதல்லது ஒரு ஞான்றும் வேறுபடுக்கப் படுஞ் சொல்லாகா என நியமிப்பது இச்சூத்திரம் என்பர் சேனவரையர். இனி, இச்சூத்திரத்திற்கு இவ்வாறு நேரே பொருள் கொள் ளாது வேற்றுமைச் சொல்லெல்லாம் இடைச்சொல் என இயைத்து, முடிக்குஞ் சொல்லே விசேடித்து நிற்கும் சொற் களெல்லாம் முடிக்கப்படுஞ் சொற்கும் முடிக்குஞ் சொற்கும் நடுவே வருஞ் சொல்லாய் நிற்கும்.’’ எனப் பொருள் கூறுவர் நச்சினர்க்கினியர். (உ-ம்) 'கண்ணி கார்நறுங் கொன்றை ........... ஊர்தி வால்வெள்ளேறே (புறம்-1) என்புழிக் கொன்றையையும் ஏற்றையும் இடைவந்த சொற்கள் விசேடித்து வந்தன. ஈர்ந் தையோனே பாண்பசிப் பகைஞன். (புறம்- ) என்புழி