பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

437 இடைச்சொல்லும் உரிச்சொல்லும் மேற்கூறப்பட்ட இலக் கணமேயன்றிப் பிற இலக்கணமுடைய என்பது உணர்த்தினர். இனி அவையேயன்றி வினையெஞ்சு கிளவியும் பல இலக்கணத் தன என்பதுபட நின்றமையான் வினையெஞ்சு கிளவியும்: என்ற உம்மை இறந்தது தழி இய எச்சவும்மை. வினையெச்சத் தின் இலக்கணம் ஒரியல்பினவன்றித் திரிதல், வேறு பொரு ளுணர்த்தல், விசேடித்தல் முதலாகப் பலவேறு திறத்தன வாதலின் வேறு பல் குறிய என்ருர் . குறி - இலக்கணம் , அவையாவன: செய்தெனெச்சம் வினைமுதல் வினை கொள்ளாது உரற்கால் யானே ஒடித்துண்டு எஞ்சிய யா? ஞாயிறு பட்டு வந்தான் எனப் பிறிதின் வினே கோடலும், மோயினள் உயிர்த்த காலே என அஃது ஈறுதிரிதலும் கண்ணியன் வில்லன் வரும் என முற்றுச் சொல்லது திரிபாய் வருதலும், ஓடிவந்தான், விரைந்து போயினன் எனவும், வெய்ய சிறிய மிழற்றுஞ் செவ்வாய் எனவும், செவ்வன் தெரிகிற்பான், புது வதின் இயன்ற அணியன் எனவும் தம்மை முடிக்கும் வினேக் கட்கிடந்த தொழிலும் பண்பும் குறிப்பும் உணர்த்தித் தெரிநிலே வினையுங் குறிப்பு வினையுமாய் முடிக்குஞ் சொல்லே விசேடித் தலும் பிறவுமாம் என்பர் சேனவரையர். 'ஒடித்துண்டெஞ்சிய' என்பது முதலாயின செயவெ னெச்சம் செய்தென் எச்சமாய்த் திரிந்தன என்றும், பெயர்த் தனென் முயங்க முதலாயின செய்தெனெச்சம் முற்ருய்த் திரிந்தனவென்றும் கூறுவர் உரையாசிரியர். 'உரற்கால் யானே யொடித்துண்டு எஞ்சிய யா? எனவும் ஞாயிறு பட்டு வந்தான்? எனவும் வரும் தொடர்களில் உண்டு, பட்டு என்னும் செய்தெனெச்சங்கள் தமக்குரிய வினைமுதல்வினே கொள்ளாது பிறிதின்வினை கொண்டனவாயினும் செய்தெனெச் சத்திற்குரிய இறந்தகால முணர்த்துதலால் ஏனேக்காலத்திற் குரிய செயவெனெச்சத்தின் திரிபாகா , செயவெனெச்சம், மழைபெய்ய மரந்தளிர்த்தது? என்ருங்குக் காரண காரியப் பொருண்மையுணர்த்தும் வழியல்லது இறந்தகாலம் உணர்த் தாது. யானே ஒடித்து உண்ணுதலும் ஞாயிறுபடுதலும் யா மரம் எஞ்சுதற்கும் ஒருவன் வருதற்கும் காரணமன்மையால்